Actor Ajith: ரசிகர்கள் கொண்டாடும் அஜித்தின் ரீசண்ட் லுக்.. ஷாலினி வெளியிட்ட ஸ்டைல் புகைப்படம்!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்ததாக லைகா தயாரிப்பில் நடிகர் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட நிலையிலும் உடனடியாக சூட்டிங் துவங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சில தினங்கள் பிரேக் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த 12ம் தேதி இந்தப்படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் அசர்பைஜானிலேயே திட்டமிடப்பட்டது. ஆனாலும் திட்டமிடப்பட்டபடி சூட்டிங் துவங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு மார்ச் மாதத்தில் ஏகே63 படத்தில் அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Ajiths Recent click shared by Shalini in her Instagram page

நடிகர் அஜித்: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. கடந்த ஆண்டு பொங்கலையொட்டி அஜித்தின் துணிவு படம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து உடனடியாக அவரது அடுத்தப்படத்தின் சூட்டிங் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏகே62 படத்தின் டைட்டில் மற்றும் அறிவிப்பை கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டியே லைகா நிறுவனம் அறிவித்தது. இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனது.

விடாமுயற்சி படம்: இதனிடையே கடந்த இரு மாதங்களாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் அஜித் -அர்ஜூன் இடையிலான சில ஆக்ஷன் காட்சிகளையும் கார் சேஸிங் காட்சிகளையும் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி எடுத்து முடித்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சில தினங்கள் பிரேக் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கடந்த 12ம் தேதி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டது. இருந்தபோதிலும் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஏகே63 படம்: இதனிடையே அடுத்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே 63 படத்தின் சூட்டிங்கில் இணைய அஜித் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை பிப்ரவரிக்குள் நிறைவு செய்ய மகிழ் திருமேனிக்கு அஜித் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. சமீப காலங்களில் அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து அதிகமான புகைப்படங்களை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து அஜித்தின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

ரீசண்ட் கிளிக்: இந்நிலையில் அஜித்தின் ரீசண்ட் கிளிக்கை அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷாலினி அஜித் தொடர்ந்து தன்னுடைய மகள், தங்கை, அஜித் மற்றும் மகனுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அஜித்தின் ஸ்டைலிஷ்ஷான புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் கூலர்சுடன் அஜித் மாஸாக காணப்படுகிறார். அவரது சமீபத்திய உடை தேர்வு குறித்தும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X