Actor Ajith: நடிகர் அஜித்தின் ரீசண்ட் கிளிக்ஸ்.. ரெஸ்டாரெண்ட்ல என்ன பண்றாரு?

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலையொட்டி துணிவு படம் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஒரு ஆண்டை கடந்த நிலையில் அவரது அடுத்தப்படம் இன்னும் சூட்டிங் லெவலிலேயே உள்ளது. அஜித் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்த பிறந்தநாளே இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. இன்னமும் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இல்லை.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகும் சூழலில் ஆதி ரவிச்சந்திரனுடன் அஜித், குட் பேட் அக்லி என்ற அடுத்தப்படத்தின் அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளார். விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தாமதத்தால் இந்தப் படத்தின் சூட்டிங்கும் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இருந்தபோதிலும் வரும் ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Ajith s recent clicks with his fans

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி அஜித்தின் துணிவு படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. படத்தில் மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர். முன்னதாக ஹெச் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களிலும் அஜித் நடித்திருந்தார்.

Actor Ajith s recent clicks with his fans

விடாமுயற்சி படம்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. ஆயினும் உடனடியாக சூட்டிங் துவங்கப்படாமல் கடந்த ஆண்டின் இறுதியில்தான் துவங்கப்பட்டது. அசர்பைஜானில் துவங்கப்பட்ட இந்த சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த சூழலில், சூட்டிங்கை தொடர்ந்து நடத்த, அங்கு நிலவிய காலச்சூழல் இடம்கொடுக்கவில்லை. இதனால் சூட்டிங்கை இடையிலேயே பேக்கப் செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

Actor Ajith s recent clicks with his fans

மீண்டும் சூட்டிங்: இந்நிலையில் மற்ற லொகேஷன்களில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டது. இந்த சூழலில், அசர்பைஜானிலேயே மீண்டும் சூட்டிங்கை தொடர சூழல் சிறப்பாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் அங்கேயே அடுத்தக்கட்ட சூட்டிங்கை இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். வரும் மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங், அசர்பைஜானிலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு வாரங்கள் அங்கு சூட்டிங் நடத்தப்பட்டு ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய இயக்குநர் திட்டமிட்டுள்ளார். அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அங்கு செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித் ரீசண்ட் கிளிக்ஸ்: இந்த சூட்டிங்கிற்காக நடிகர் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது தயாராகவுள்ள சூழலில், அடுத்தடுத்த லொகேஷன்களில் அஜித் தன்னுடைய ரசிகர்களுடனி இணைந்து புகைப்படங்களை எடுத்து வருகிறார். ரெஸ்டாரெண்ட் ஒன்றில் தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து அவர் அடுத்தடுத்த புகைப்படங்கள் எடுத்த சூழலில் அவையனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தபோதிலும் உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டாகவே காணப்படுகிறார் அஜித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X