Actor Ajith: பிரியாணி சமைத்துவிட்டு ஹாயாக என்ஜாய் செய்த அஜித்.. ரீசண்ட் கிளிக்ஸ் இதோ!
சென்னை: நடிகர் அஜித்திற்கு இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சாக்லேட் ஹீரோவாக எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தன்னை ஹீரோவாக வெளிப்படுத்திய அஜித், அமர்க்களம் உள்ளிட்ட படங்களின் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாக தன்னை உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து தற்போது தன்னுடைய வயதுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய கனவான பைக் பயணங்களையும் அவர் தொடர்ந்து வருகிறார்.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்து வந்த நிலையில் சூட்டிங் நடத்த முடியாத சூழலில் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் அசர்பைஜானிலேயே இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்திஇன் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் ஜப்பானில் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் சாக்லேட் பாயாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார் அவரது ஹேண்ட்சம் லுக் ஏராளமான ரசிகைகளை அவருக்கு பெற்றுத் தந்தது. இதனிடையே ஒரு கட்டத்தில் அமர்க்களம் போன்ற படங்களின் மூலம் தன்னை அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து தற்போது கமர்சியலான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியான இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.
விடாமுயற்சி படம்: தொடர்ந்து அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் அவரது பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்டது. இந்த படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்று டைட்டில் வைக்கப்பட்டது. உடனடியாக சூட்டிங் துவங்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் துவங்கியது. அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அங்கு ஷூட்டிங்கை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அங்கிருந்து ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினர். இதனிடையே மற்ற லொகேஷன்களில் படத்தின் சூட்டிங்கை நடத்தி முடிக்கலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டனர்.
குட் பேட் அக்லி படம்: இந்நிலையில் அதற்கான வாய்ப்பு சரியாக அமையாத நிலை காணப்பட்டது. இதையடுத்து தற்போது அசர் பைஜானில் சூட்டிங் எடுப்பதற்கான சூழல் காணப்படுவதால் அங்கேயே அடுத்த கட்ட ஷூட்டிங்கை துவங்கவும் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே அஜித்தின் ஏகே 63 படத்தின் அறிவிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க கமிட் ஆகியுள்ளார். கடந்த ஆண்டில் விஷால் நடிப்பில் இவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதத்தில் குட் பேட் அக்லி பட சூட்டிங்: இந்த படத்தின் சூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டுள்ளார். இதனிடையே விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் தவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையில் கிடைத்துள்ள இந்த கேப்பில் தன்னுடைய நண்பர்களுடன் மத்திய பிரதேசத்திற்கு பைக் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் அஜித். இந்த பயணத்தில் தன்னுடைய நண்பர்களுக்கு அஜித் பிரியாணி சமைத்து போட்ட வீடியோக்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தன.
அஜித் ரீசண்ட் கிளிக்ஸ்: விடாமுயற்சி படத்தை தான் காட்ட மாட்டேன் என்கிறார் அட்லீஸ்ட் இதுபோன்ற வீடியோக்களையாவது பகிர்கிறாரே என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அவரது ரீசண்ட் கிளிக்ஸ் மீண்டும் வெளியாகியுள்ளது. பிரியாணி சமைத்துவிட்டு ஹாயாக அதன் அருகே அவர் படுத்திருக்கும் படியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் தன்னுடைய நண்பர்கள் கூட்டத்துடன் இணைந்து அவர் அடுத்தடுத்த புகைப்படங்களில் காணப்படுவதையும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











