Ajith: சம்பளத்தில் சென்டிமெண்ட் பார்க்கும் அஜித்.. ஏகே63 படத்தில் இவ்வளவு சம்பளமா?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி சில தினங்கள் சூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்ட நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் இந்த வாரத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக அஜித் -அர்ஜூன் காம்பினேஷன் காட்சிகள், கார் சேசிங் காட்சிகளாக எடுக்கப்பட்டன. இதையடுத்து தற்போது அஜித் -திரிஷா காம்பினேஷன் காட்சிகளாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மார்ச் மாதத்தில் இருந்து அஜித் தனது ஏகே63 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை மார்க் ஆண்டனி வெற்றிப்படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டுள்ள ஆதித், இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி படத்தை டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு இயக்கியிருந்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை காமெடி என்டர்டெயினராக எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actor Ajiths salary sentiment in AK63 movie

நடிகர் அஜித்: நடிகர் அஜித் -மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் படம் விடாமுயற்சி. துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் கடந்த இரு மாதங்களாக நடந்து வருகிறது. மொத்தமாக இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் சமீபத்தில் அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் சென்னை திரும்பினர்.

கார் சேஸிங் காட்சிகள்: இந்நிலையில் அஜித், அர்ஜூன் காம்பினேஷனில் கார் சேஸிங் காட்சிகளை கடந்த இரு வாரங்களாக மகிழ் திருமேனி எடுத்து முடித்துள்ளார்.ஆக்ஷன் திரில்லராக உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழுவினருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணையும் ஏகே633 படத்தின் சூட்டிங் மார்ச் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்குள் விடாமுயற்சி படத்தை முடித்துக் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அஜித் -அர்ஜூன் கார் சேஸிங் காட்சிகள்: இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ஏகே63 படத்தில் நடிகர் அஜித்திற்கு 163 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்பணமாக அவருக்கு 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு ரவுண்டாக தன்னுடைய சம்பளத்தை தீர்மானிக்காமல் இதுபோன்ற ஒரு சம்பளத்தை பெறுவதற்கு ராசி தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அஜித்தின் ராசி நம்பர் 1 என்பதால் அவர், இந்த எண்ணிக்கையை தனது சம்பளமாக ஃபிக்ஸ் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்தின் சம்பள சென்டிமெண்ட்: இதனிடையே, அஜித் படங்களின் பிசினஸ் என்பது 250 கோடிகளாக இருக்கும் நிலையில் அவருக்கே 163 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கட்டுப்படி ஆகாது என்பதால்தான் முன்னதாக இந்தப் படத்திலிருந்து சத்யஜோதி நிறுவனம் பின்வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அடுத்ததாக வெளியாகவுள்ள விடாமுயற்சி படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித்திற்கு அடுத்தப்படத்திற்கு இத்தகைய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X