Actor Ajith: வெளிநாட்டில் கிளாசாக சுற்றித்திரியும் அஜித்.. கூட யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக அசர்பைஜானில் நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு பனிப்புயல் வீசி வருவதால் தொடர்ந்து சூட்டிங்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசர்பைஜானில் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் அசர்பைஜானிலிருந்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். ஆனால் அஜித் சென்னை திரும்பாமல், துபாய் சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
படத்தின் சூட்டிங் புதிய லொகேஷனில் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் படத்தின் ஒட்டமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி டைரக்ஷனில் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகியுள்ள விடாமுயற்சி படம் அஜித்திற்கு சிறப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியாகி ஒரு ஆண்டை கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த தீபாவளியையொட்டியே வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்ட அவரது விடாமுயற்சி படம் அடுத்தடுத்த தாமதங்களால் இன்னும் சூட்டிங்கே நிறைவடையாத நிலை காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக அசர்பைஜானில் படத்தின் சூட்டிங் தொடர்ந்த நிலையில், தற்போது சூட்டிங் நடத்த தேவையான சூழல் அங்கு இல்லை. அங்கு பனிமழை பொழிந்துவருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அசர்பைஜான் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். அஜித் துபாய் சென்றுவிட்டதாக கூறப்பட்டுளள்து.

விடாமுயற்சி சூட்டிங்: இந்நிலையில் அடுத்த வாரத்தில் சாசியாவில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக ஆரவ்வுடனும் தனியாகவும் அஜித் பல புகைப்படங்களை எடுத்துள்ள நிலையில் அவை அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. விதவிதமான பின்புலங்களில் இந்தப் புகைப்படங்களில் அஜித் மாஸாக காணப்படுகிறார். அவருடன் ஆரவ்வும் இணைந்துள்ளார். வித்தியாசமான வகையிலும் இந்த போட்டோஸ் எடுக்கப்பட்டுள்ளன. சில புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்தடுத்த புகைப்படங்கள்: சிறப்பான மற்றும் வித்தியாசமான கோணங்களில் புகைப்படங்களை எடுப்பதில் அஜித் தேர்ந்தெடுத்தவராக காணப்படும் நிலையில் முன்னதாக படக்குழுவினர் அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டவர்களின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை எடுத்து அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது வித்தியாசமான புகைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. வித்தியாசமான பின்புலங்களில் வித்தியாச உடைகளுடன் வித்தியாசமான கோணங்களில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விடாமுயற்சி படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகின்றன.
அஜித் -ஆதிக் கூட்டணி: விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு, தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்தின் சூட்டிங்கில் அஜித் இணையவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை பிப்ரவரிக்குள் நிறைவு செய்ய படக்குழுவினரை அஜித் கேட்டுள்ளார். முன்னதாக அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தை அவரது ஏகே63 படத்தில் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மார்க் ஆண்டனி படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











