Actor Ajith: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்.. அட அங்கேயா?

சென்னை: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியாகி ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி படமாக மாறியது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வெளியான இந்த படம், மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். துணிவு படத்தை தொடர்ந்து உடனடியாக அடுத்த படத்தில் அஜித் தன்னை இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது அடுத்தப்படம் தொடர்ந்து தாமதமானது. கடந்த ஆண்டு கடந்த மே மாதத்தில் இவரது விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து படத்தின் சூட்டிங் தாமதமான நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. அசர்பைஜானில் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்துவந்தது. இந்த சூட்டிங்கில் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் நடித்து வந்தனர். இந்த மாதத்திலேயே படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அசர்பைஜானில் ஏற்பட்ட பனி மழை காரணமாக படத்தின் ஷூட்டிங்கை அங்கு தொடர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசர்பைஜான் சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

Actor Ajiths Vidaamuyarchi movie next schedule plan in Tunisia

நடிகர் அஜித்: நடிகர் அஜித் 30 ஆண்டுகளை கடந்து தன்னுடைய திரை பயணத்தில் தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகிறார். அவரது படங்களில் சமூக அக்கறையும் இணைந்து ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்து வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலையொட்டி அவரது துணிவு படம் வெளியானது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் இருந்த நிலையில் படம் ரசிகர்களை சிறப்பாக கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியது. வெற்றி படமாகவும் அமைந்தது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

விடாமுயற்சி படம்: ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் மூன்றாவது படமாக ஹாட்ரிக் வெற்றியை துணிவு படம் கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக அவரது ஏகே 62 படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு கடந்த ஆண்டு தீபாவளியிலேயே ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது விடாமுயற்சி படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அவரது பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கியது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடந்து வந்த நிலையில் அங்கும் ஷூட்டிங்கை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

சூட்டிங் தாமதம்: அசர்பைஜானில் தொடர்ந்து பனிமழை பொழிந்து வந்த நிலையில் ஷூட்டிங் முடித்துக்கொண்டு தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் துனிசியாவில் இந்த மாத இறுதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நடத்த இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சென்னையில் 5% ஷூட்டிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்: அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி விடாமுயற்சி படம் மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் சூட்டிங் தாமதத்தால் படத்தின் ரிலீசும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் முன்னதாகவே விற்பனையாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் படக்குழுவினர் துவங்கியுள்ளனர். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தில் அஜித் இணையவுள்ளார். இதனிடைய விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் அல்லது 21 ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X