Actor Ajith: தொடர்ந்து தடைப்படும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்.. துபாய் திரும்பிய அஜித்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் நடந்து வருகிறது. இருந்தாலும் படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து நடத்த முடியாதபடி அங்கு சில பிரச்சினைகளை படக்குழுவினர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். வரும் பிப்ரவரி மாத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தின் இணையும் திட்டத்தில் இருக்கிறார் அஜித். ஆனாலும் இந்த திட்டத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் விடாமுயற்சி பட சூட்டிங்கில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டவண்ணம் காணப்படுகிறது.

இதனால் அசர்பைஜானில் இருந்து சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு இன்று விடாமுயற்சி டீம் சென்னை திரும்பியுள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங்கை அசர்பைஜானில் தொடர முடியுமா அல்லது சூட்டிங் ஸ்பாட்டை மாற்றுவார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நடிகர் அஜித்துடன் இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டரில் நடித்துவரும் சூழலில் அவர்களும் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். விரைவில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து கோடைக் கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting cancelled due to Snow rain in Azerbaijan

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில் ரிலீசானது. விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய போதிலும் விமர்சன அளவிலும் வசூல்ரீதியாகவும் துணிவு படம் அஜித்திற்கு சிறப்பாக கைக்கொடுத்தது. ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகப்பட்டிருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் அறிவிப்பை சில மாதங்கள் கழித்தே அஜித் வெளியிட்டார். அவரது பிறந்தநாளையொட்டி மே மாதத்தில்தான் இந்தப் படம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக அஜித்தின் ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது தடைப்பட்டது.

விடாமுயற்சி படம்: விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டும் உடனடியாக சூட்டிங் துவங்கப்படவில்லை. கடந்த ஆண்டு இறுதியில்தான் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படத்தை ஒரேகட்டமாக நடத்தி முடிக்க அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நினைத்தபடி சூட்டிங்கை ஒரேகட்டமாக நடத்த முடியாதபடி அடுத்தடுத்த பிரச்சினைகளை இந்தப் படம் சந்தித்து வருகிறது. ஆயினும் படத்தை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துவிட்டு அடுத்ததாக ஏகே63 படத்திற்காக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இணைய அஜித் திட்டமிட்டுள்ளார்.

தாமதப்படும் விடாமுயற்சி சூட்டிங்: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சில தினங்கள் கேப் எடுத்துக் கொண்ட நிலையில் மீண்டும் கடந்த 12ம் தேதி படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டது. ஆனால் நினைத்தபடி சூட்டிங்கை துவங்க முடியவில்லை. சில செட் வேலைகளுக்காக படத்தின் சூட்டிங் தாமதப்படுவதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் படத்தின் சூட்டிங்கை துவங்க திட்டமிட்டப்பட்ட நிலையில் அசர்பைஜானில் தற்போது பனிமழை பெய்து வருகிறது. இதனால் சூட்டிங்கை தொடர முடியாமல் படக்குழுவினர் இன்றைய தினம் சென்னை திரும்பியுள்ளனர்.

துபாய் திரும்பிய அஜித்: ஆனால் நடிகர் அஜித் துபாய்க்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிமழை சில தினங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தை எடுக்கலாமா அல்லது முன்னதாக திட்டமிட்டபடி ஷார்ஜாவில் படத்தின் சூட்டிங்கை தொடரலாமா என்று தற்போது படக்குழு யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியான போதிலும் பிப்ரவரி மாதத்திற்கு சூட்டிங்கை நிறைவு செய்ய, மகிழ் திருமேனி திட்டமிட்டு அதன்படி காட்சிகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X