Actor Ajith: விடாமுயற்சி குறித்து லைகாவிடம் திட்டவட்டமாக பேசிய அஜித்.. என்னதாங்க நடக்குது!

ஐதராபாத்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசானது துணிவு படம். ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியாகி சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது.

இந்நிலையில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இணைந்திருக்கிறார் அஜித். கடந்த ஆண்டு மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டியே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான சூழலில் தொடர்ந்து சூட்டிங் துவங்குவதிலேயே தாமதம் இருந்தது. தொடர்ந்து அசர்பைஜானில் கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு இன்னும் படத்தின் சூட்டிங் நிறைவடையாமல் உள்ளது.

Actor Ajith s Vidaamuyarchi movie shooting continuous delay

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்கள் உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியானது துணிவு படம். ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியானது.படம் விஜய்யின் வாரிசு படத்துடன் இணைந்து வெளியான சூழலில் சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்தார் அஜித். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டியே வெளியானது.

சூட்டிங் தாமதம்: இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகவே கடந்த ஆண்டு இறுதியில்தான் துவங்கப்பட்டது. அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங்கை துவங்கினார் மகிழ் திருமேனி. தொடர்ந்து படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்த சூழலில் அசர்பைஜானில் ஏற்பட்ட காலசூழல் காரணமாக படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது. இதனால் அடுத்தப்படத்தில் கமிட்டாகாமல் இருந்த அஜித்குமார், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மே மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஜூன் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சுபாஷ்கரனுடன் அஜித் பேச்சு: ஆனால் தற்போதுவரை விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்காமல் உள்ளது. மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தின் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் லைகாவின் நிதிநிலை காரணமாக படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் அஜித் இந்தப் படம் குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு சூட்டிங் நடத்தமுடியும் என்று தெரிந்தால் தன்னிடம் கூற அஜித் கூறியுள்ளாராம். முன்னதாக தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தான் அடுத்தப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.

தீபாவளிக்கு ரிலீசாகுமா?: விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே திட்டமிட்டபடி சூட்டிங் நடத்தப்பட்டிருந்தால் கடந்த ஆண்டு தீபாவளி ரிலீசாகவே வெளியாகியிருக்கும் என்று கூறப்பட்டுவரும் சூழலில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தொடர்ந்து படத்தின் சூட்டிங் தாமதமாவதால், படம் இந்த ஆண்டு தீபாவளிக்காவது வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே அடுத்ததாக குட் பேட் அக்லி சூட்டிங்கில் இணையும் அஜித், முதல்கட்ட ஷெட்யூலை நிறைவு செய்துவிட்டே அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X