Actor Ajith: தாமதமாகும் அஜித்தின் விடாமுயற்சி பட சூட்டிங்.. இதுதான் காரணம்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானானில் தொடர்ந்து நடந்து வருகிறது. புத்தாண்டையொட்டி சில தினங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து அஜித் லண்டனில் புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகள் அனௌஸ்காவின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மீண்டும் அசர்பைஜான் திரும்பினார். ஆனாலும் திட்டமிட்டபடி இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறாமல் தற்போது தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளையொட்டியே அறிவிக்கப்பட்டது விடாமுயற்சி படம். ஆனாலும் வைகா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக இயக்குநர் மகிழ் திருமேனி போலவே ரசிகர்களும் காத்திருந்தனர். ஒரு வழியாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏகே63 படத்தின் சூட்டிங்கில் மார்ச் மாதத்தில் அஜித் இணையவுள்ளதால், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting delayed in Azerbaijan

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரிலீசான நிலையில், கடந்த ஆண்டிலேயே அவரது விடாமுயற்சி படம் தீபாவளியையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் சூட்டிங், தீபாவளியையொட்டியே துவங்கப்பட்டது. இந்நிலையில் அசர்பைஜானில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களாக நடத்தப்பட்டு, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன. இந்த சூட்டிங்கில் அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜூன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடாமுயற்சி படம்: தொடர்ந்து படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்ப படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனாலும் மணற்புயல் உள்ளிட்ட காரணங்களால் முன்னதாக சில தினங்கள் சூட்டிங் தடைபட்டது. இதையடுத்து அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் சென்னை திரும்பி, சில தினங்களுக்கு பிறகு மீண்டும் அசர்பைஜான் சென்றனர். இந்நிலையில் புத்தாண்டிற்காக சில தினங்கள் படக்குழுவினர் மீண்டும் சூட்டிங்கிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டனர். கடந்த ஜனவரி 12ம் தேதி மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சூட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தாமதமாகும் சூட்டிங்: அசர்பைஜானில் விடாமுயற்சி சூட்டிங்கிற்காக சிறிய அளவிலான செட்கள் அமைக்கப்பட்டு வருவதால் சூட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்ற யூனிட் வேலையில்லாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசர்பைஜானில் ஒருநாள் சூட்டிங்கை நடத்தி முடிக்க 50 லட்சம் ரூபாய் செலவாவதாகவும் தற்போது சூட்டிங் நடத்தப்படாமல் உள்ளது மேலும் நஷ்டத்தை எற்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை பிப்ரவரியில் நிறைவு செய்துவிட்டு மார்ச் மாதத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏகே63 பட பூஜை: இதனிடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள ஏகே63 படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளும் மறுபுறம் ஜரூராக நடந்து வருகிறது. தற்போது இந்தப் படத்திற்கான அலுவலக அளவிலான பூஜை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய மகிழ் திருமேனி மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு அஜித் அழுத்தம் கொடுத்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X