Actor Ajith: நாளை துவங்கும் விடாமுயற்சி அடுத்தக்கட்ட சூட்டிங்.. பர்ஸ்ட் லுக் அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் நடந்து வந்தது. ஆக்ஷன் திரில்லராக எடுக்கப்பட்டுவரும் விடாமுயற்சி படத்தில் இதுவரை அதிகமாக ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கடந்த சில தினங்களாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நாளை முதல் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் தன்னுடைய மகள் அனௌஷ்காவின் பிறந்தநாள் போன்ற காரணங்களுக்காக லண்டன் சென்றிருந்தார் அஜித்குமார். இதனால் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடந்துவந்த விடாமுயற்சி சூட்டிங் கடந்த சில தினங்களாக இடைவெளி எடுத்துக் கொண்டது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் நாளை முதல் மீண்டும் துவங்கப்பட்டு இடைவெளி இல்லாமல் நடத்தப்பட உள்ளதாகவும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்யவும் படக்குழு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting next schedule starts from tomorrow

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் வெளியாகி மாஸ் காட்டியது. இந்தப் படத்தை தொடர்ந்து உடனடியாக அவரது அடுத்தப்படம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதிலும் மே மாதத்தில் அவரது விடாமுயற்சி படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அப்பொழுதும் படத்தின் சூட்டிங்கை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்தப்படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்டு இடைவெளி இல்லாமல் நடத்தப்பட்டது.

அசர்பைஜான் சூட்டிங்: ஆயினும் அசர்பைஜானில் சூட்டிங் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால், சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர். இந்நிலையில் கடந்த டிசம்பரில் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு, 15 நாட்கள் அஜித், அர்ஜூன் காம்பினேஷனில் கார் சேஸிங் காட்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மீண்டும் படக்குழுவினர் கேப் விட்டனர். இந்நிலையில் லண்டனில் புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு தற்போது மீண்டும் அஜித் அசர்பைஜான் திரும்பியுள்ளார்.

அடுத்தக்கட்ட சூட்டிங்: இதையடுத்து நாளை முதல் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொவினோ தாமசுடன் இணைந்து நடித்துவரும் நடிகை திரிஷா, அதன் சூட்டிங்கிற்காக சில வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இதையடுத்து இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடக்கவுள்ளது. படத்தில் அஜித்தின் போர்ஷன்கள் பிப்ரவரி மாதத்திற்கு நிறைவடையவுள்ளது. தொடர்ந்து மார்ச் மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் அடுத்தப்படத்தில் இணையவுள்ளார்.

விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் அப்டேட்: இதனிடையே விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தடம், தடையற தாக்க உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ள மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. அதிகமாக ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகிவரும் இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, ரெஜினா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசான அஜித்தின் துணிவு படம் இன்றைய தினம் முதல் ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ளது. இதையொட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X