Ajith Kumar: துபாயில் செட்டில் ஆகிறாரா அஜித்.. புதிய பிசினஸ் துவக்கம்?

சென்னை: நடிகர் அஜித்குமார் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

அடுத்ததாக அவரது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் வரும் 4ம் தேதி அஜர்பைஜானில் துவங்கவுள்ளது. இதற்காக படக்குழுவினர் நேற்றைய தினம் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளனர்.

Actor Ajiths Vidamuyarchi movie Shooting to start on 4th October

அஜர்பைஜானை தொடர்ந்து துபாயிலும் பாலைவனத்தில் படத்தின் முக்கியமான ஃபைட் சீன் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

துபாயில் செட்டில் ஆகிறாரா அஜித்?: நடிகர் அஜித்குமார் சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவர் தனது படமொன்றில் கூறுவதுபோல, தன்னுடைய வாழ்க்கையை தானே சிறப்பாக செதுக்கியுள்ளார். சினிமாவுடன் இணைந்தே தன்னுடைய கனவான உலக பைக் சுற்றுலாவையும் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் ஓமன் உள்ளிட்ட இடங்களிலும் இவரது உலக பைக் சுற்றுலா தொடர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு சென்னை திரும்பிய அஜித், அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கிறார்.

கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தின் சூட்டிங் குறித்து தெரியாமல் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனநிலையில், தற்போது வரும் 4ம் தேதி படத்தின் சூட்டிங், அஜர்பைஜானில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக 2ம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங் துவங்குவதாக இருந்த நிலையில், தற்போது இரு தினங்கள் மேலும் தள்ளிப் போயுள்ளது.

Actor Ajiths Vidamuyarchi movie Shooting to start on 4th October

இந்தப் படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் துவங்கவுள்ள நிலையில், நேற்றைய தினம் படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். முன்னதாக படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் புறப்பட்டு சென்ற நிலையில், சூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தொடர்ந்து இங்கு படத்தின் சூட்டிங் ஒரேகட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து துபாயில் படத்தின் ஃபைட் காட்சிகளுக்கான சூட்டிங் நடத்தப்பட உள்ளன.

இதையடுத்து சென்னை திரும்பும் படக்குழுவினர், இங்கு 10 நாட்கள் படத்தின் சூட்டிங் எடுப்பதுடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டபடி நடக்கும் சூழலில் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில்தான் விஜய்யின் தளபதி 68 படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் விஜய் -அஜித் படங்கள் மோதுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Actor Ajiths Vidamuyarchi movie Shooting to start on 4th October

துபாயில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தான் வாங்கியுள்ள சொந்த வீட்டிலிருந்து அஜித், இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. துபாயில் அஜித் பிரம்மாண்டமான வீடு வாங்கியுள்ள நிலையில், அலுவலகமும் துவங்கியுள்ளார். இதனிடையே, அஜித் துபாயில் செட்டில் ஆகவுள்ளதாகவும் அதனால்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் வலைபேச்சு ஆனந்தன் தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

துபாயின் சூழல் வாழ்வதற்கு ஏற்றாற் போன்றது என்பது ஒருபுறமிருக்க, அஜித் அங்கே செட்டில் ஆகவில்லை என்றாலும், ஆண்டில் பாதி நாட்கள் அங்கேயே தங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் அங்கேயே புதிய பிசினஸ் ஒன்றை துவக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தபோதிலும், தன்னுடைய உலக பைக் டூரை பாதிக்கும் மேல் நிறைவு செய்துள்ள அஜித், விடாமுயற்சி படத்தின் ரிலீசின்போது ஏறக்குறைய அதை நிறைவு செய்துவிடுவார். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X