நயன்தாராவுடன் மீண்டும் இணையும் வில்லன் நடிகர்…என்ன படம் தெரியுமா ?

சென்னை : நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய அஜ்மல் அமீர் மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க ஒப்பந்தாகி உள்ளார்.

பிரித்விராஜ் ஹீரோவா நடிக்கும் படத்தில் அஜ்மல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சாதே படத்தில் அறிமுகம்

அஞ்சாதே படத்தில் அறிமுகம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அஞ்சாதே திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அஜ்மல். இந்த திரைப்படத்தில் அஜ்மலுக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும். பலரின் பாராட்டுக்களையும் இத்திரைப்படம் அவருக்கு பெற்றுத்தந்தது.

கோ படத்தில்

கோ படத்தில்

அதன்பிறகு ஜீவா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய கோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தார் அஜ்மல். அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய உயரம் கிடைக்கும் என பல பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டன.

படவாய்ப்பு இல்லை

படவாய்ப்பு இல்லை

கோ படத்திற்கு பிறகு இரவுக்கு ஆயிரம் கண்கள், சித்திரம் பேசுதடி 2, உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் இந்த திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்பை தராததால், சில வருடங்கள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்துள்ளார்.

நெற்றிக்கண்

நெற்றிக்கண்

நயன்தாராவின் நடிப்பில் இணையத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லானாக நடித்துள்ளார் அஜ்மல். இத்திரைப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு எவ்வளவு பாராட்ட பட்டதோ அதே அளவுக்கு அஜ்மலில் வில்லன் கதாபாத்திரம் பாராட்டை வெற்றது.

Recommended Video

NAYAN -யை பார்க்க திரண்ட கூட்டம் | kathuvakkula Rendu Kadhal, Vijaysethupathi
நயன்தாராவுடன் மீண்டும்

நயன்தாராவுடன் மீண்டும்

இந்நிலையில், நயன்தாரா அடுத்ததாக பிரேமம், நேரம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க இருக்கிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் அஜ்மல் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசாசு 2வில்

பிசாசு 2வில்

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் பிசாசு 2 படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜ்மல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X