Actor Vijay: விஜய்யின் GOAT பட 2வது சிங்கிள் ரொமான்ஸ் பாட்டுதான்.. அஜ்மல் பகிர்ந்த விஷயம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரிஷா மற்றும் விஜய்யின் காம்பினேஷன் பாடல் மிகப்பெரிய அளவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்கும் என்றும் அதையடுத்து ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். மேலும் விஜய்யுடன் இணைந்து திரிஷாவும் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இவை அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன.

Actor Ajmal opens up about Vijay s The greatest of all time movie second single

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் திரிஷாவின் பாடல் காட்சியின் விடுபட்ட சில காட்சிகள் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில் அடுத்ததாக சென்னை மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் அடுத்தக்கட்ட ஷெட்யூல் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் நிறைவடைந்தவுடன் இன்னும் இரு வாரங்களுக்கு படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5ல் ரிலீஸ்: படம் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பை விஜய் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்றும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்த ஆண்டிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை விஜய் திட்டமிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவிலிருந்து விஜய் விலகவுள்ள சூழலில், இந்த இரு படங்களும் ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளன.

நட்சத்திர பட்டாளம்: இது மட்டுமல்லாமல் தற்போது விஜய்யின் கில்லி படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மாஸ் காட்டி வருகிறது. கடந்த ஒரு வாரத்திலேயே இந்த படம் 20 கோடிகளுக்கும் மேலாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் என்றாலே எப்போதும் கில்லி தான் என்பதை தனது கில்லி பட ரீ ரிலீசின் மூலம் விஜய் நிரூபித்துள்ளார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் கில்லி படம் அதை எல்லாம் தாண்டி ரீ ரிலீசிலேயே மாஸ் காட்டி வருகிறது. கோட் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

GOAT படத்தின் 2வது சிங்கிள்: இது மட்டுமில்லாமல் நடிகை திரிஷாவும் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. சில கலவையான விமர்சனங்களையும் பெற்றது. யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு பாடல் அமைக்கும் போது சற்று அதிக கவனம் எடுத்துக்கொண்டு அமைக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அடுத்ததாக விஜய் பிறந்தநாளை ஒட்டி வரும் ஜூன் மாதத்தில் படத்தின் 2வது சிங்கிள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் முதல் பாடலை போல இல்லாமல் காதல் பாடலாக அமையும் என்று படத்தின் நடிகர் அஜ்மல் தனது பேட்டி ஒன்றில் தற்போது தெரிவித்துள்ளார்.

அஜ்மல் உற்சாகம்: படம் மிகப்பெரிய ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளது குறித்து தான் தற்போது எதையும் தெரிவிக்க முடியாது என்றும் இது குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப்படம் ஃபேமிலி என்டர்டெயினராகவும் ஆக்சன் மற்றும் மாஸ் என்டர்டெய்னராகவும் உருவாகியுள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X