மொத்தம் 30 கோடியாச்சு.. அள்ளி அள்ளி கொடுக்குறாரே.. போலீசாரை நெகிழ வைத்த பிரபல நடிகர்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் மும்பை போலீஸ் ஃபவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார்.

Recommended Video

Wow: Amir Khan master plan | Money in Wheat Bag | Amir Khan

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவட் ஆடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மட்டுமின்றி போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தலைமை காவலர்கள் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்தனர்.

ரூ. 2 கோடி நிதி

ரூ. 2 கோடி நிதி

இதனை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

கடமையை செய்துவிட்டேன்

கடமையை செய்துவிட்டேன்

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மும்பை போலீஸ் தலைமை காவலர்களான சந்திரகாந்த் பென்டூர்கர் மற்றும் சந்தீப் சர்வ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். மேலும் என்னுடைய கடமையை நான் செய்துவிட்டேன். நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

கமிஷ்னர் நன்றி

கமிஷ்னர் நன்றி

மும்பை போலீஸ் கமிஷனரான பரம்பீர் சிங் மும்பை போலீஸ் பவுன்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய நடிகர் அக்ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நகரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் உயிரை காக்க நிச்சயம் உங்களின் பங்களிப்பு பயன்படும் என தெரிவித்துள்ளார்.

மொத்தம் 30 கோடி

மொத்தம் 30 கோடி

ஏற்கனவே நடிகர் அக்ஷய் குமார், கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார். மும்பை மாநகராட்சிக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்கினார். தற்போது மும்பை போலீசாருக்கு 2 கோடி ரூபாய் என மொத்தம் 30 கோடியை அள்ளி கொடுத்திருக்கிறார் அக்ஷய்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X