கனடா நாட்டின் சுற்றுலா தூதராக அக்ஷய் குமார் நியமனம்

By Sudha

Akshay Kumar
இந்தி நடிகர் அக்ஷய் குமார், கனடா நாட்டின் சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்ஷய் குமாருக்கு கனடாவிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்த படங்கள் அங்கும் நன்றாக ஓடியுள்ளன. கனடாவில் நடந்த வின்டர் ஒலிம்பிக் போட்டியின்போது, ஜோதி ஓட்டத்திலும் குமார் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அவரை அந்த நாட்டு சுற்றுலா தூதரகா நியமித்துள்ளனர். 2012 வரை இந்தப் பொறுப்பில் இருப்பாராம் குமார். இது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கனடாவின் சுற்றுலாவை இந்தியாவில் பிரபலப்படுத்த தயாராக இருப்பதாகவும் குமார் கூறியுள்ளார்.

இந்தியர் ஒருவரை தனது நாட்டு சுற்றுலாத் தூதராக கனடா நியமித்திருப்பதில் காரணம் உள்ளது. கடந்த ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகள் மூலம் கனடாவுக்கு 82 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அதிகரிக்கும் நோக்கில்தான் தற்போது இந்திய நடிகர் ஒருவரை சுற்றுலா தூதராக நியமித்துள்ளது கனடா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X