Actor Allu Arjun: புஷ்பா 3 படத்திற்கு தயாராகும் அல்லு அர்ஜூன்.. அவரே சொன்ன அப்டேட்!
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கிருந்தார். படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படம் சந்தன கடத்தலை மையமாக கொண்டு உருவாகி இருந்தது. ஸ்டைலிஷ் கிங்காக அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் கிராமத்து கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார். ஆயினும் தன்னுடைய பிரத்யேக ஸ்டைல் மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். பாடல்களிலும் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய்களை தாண்டி படம் வசூலித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கடந்த ஆண்டிலேயே அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தை போலவே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் புதிதாக பிரியாமணி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நடிகர் அல்லு அர்ஜூன்: நடிகர் அல்லு அர்ஜுன் டோலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டத் தருணங்களை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் சிகப்பு சந்தன கடத்தலை மையமாக வைத்து வெளியானது. படத்தில் லாரி ஓட்டுனராகவும் கடத்தல்காரராகவும் மாஸான நடிப்பை கொடுத்திருந்தார் அல்லு அர்ஜூன்.
புஷ்பா படத்தின் வெற்றி: அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக அதிரடி காட்டியிருந்தார் பகத் பாசில். மேலும் இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் கூடுதல் பலத்தை கொடுத்திருந்தன. குறிப்பாக சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்திருந்தது. இந்த படத்தின் வசூல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 400 கோடிக்களை தாண்டி வசூலித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
உறுதியானது புஷ்பா 3 படம்: கடந்த ஆண்டிலேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் ஒரு ஆண்டை கடந்து தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சர்வதேச அளவில் பெர்லின் பிலிம் பெஸ்டிவலில் பங்கேற்ற நடிகர் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் மூன்றாவது பாகம் உருவாகவுள்ளதாக உற்சாகமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து சிறப்பான ஐடியாக்களை படக்குழுவினர் வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். புஷ்பா படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு அவரது அதிகாரப்பூர்வமான இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஆகஸ்ட்டில் ரிலீசாகும் புஷ்பா 2: அல்லு அர்ஜூனுக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக அவரது டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. புஷ்பா படம் ஹிந்தியின் டப்பிங் செய்ய்பபட்டு வெளியான நிலையில், அங்கு மட்டுமே 100 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. கடந்த ஆண்டில் புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ஏராளமான எதிர்பார்ப்புகளை உண்டு செய்துள்ளது. படத்தில் ரிலீஸ் கடந்த ஆண்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை முதல் பாகத்தை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க இயக்குநர் சுகுமார் திட்டமிட்டதாகவும் அதனால் படத்தின் சூட்டிங் தாமதமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மாஸ் கதைக்களத்தை பார்க்க சில மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.


Click it and Unblock the Notifications











