இனிமே இப்படித்தான்... தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் புஷ்பா நாயகன்!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்திருந்தார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து தற்போது அல்லு அர்ஜூன் முக்கியமான முடிவொன்றை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புஷ்பா படம்

புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்த பாகமும் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்


ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பார்த்து பார்த்து சலித்த அதே பழைய கதையை சுகுமார் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் முதல் பகுதி கொடுத்த சுவாரஸ்யத்தை இரண்டாவது பகுதி கொடுக்கவில்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசான நிலையில், உலகளவில் முதல் நாளில் மட்டுமே 40 கோடி வசூல் பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனின் முந்தைய படமான அலா வைகுந்த புரமுலு படத்தின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது.

அல்லு அர்ஜுனின் திட்டம்

அல்லு அர்ஜுனின் திட்டம்

படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டுமே முதல் நாளில் 30 கோடி ரூபாயை வசூல் செய்தது. மேலும் தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தற்போது வேறு மாதிரியான திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

தமிழ் படங்களில் நடிக்க திட்டம்

தமிழ் படங்களில் நடிக்க திட்டம்

தமிழில் இந்தப் படம் வெற்றி நடை போட்டு வரும் நிலையில், அதன் வெற்றியை நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது கொண்டாடி வருகிறார். இனி தொடர்ந்து தமிழில் நேரடி படங்களில் நடிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில இயக்குநர்களிடம் கதை கேட்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறனுடன் இணைகிறாரா அல்லு அர்ஜுன்?

வெற்றிமாறனுடன் இணைகிறாரா அல்லு அர்ஜுன்?

இந்த வரிசையில் முதலில் இருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன் என்றும் கூறப்பட்டுள்ளது. வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியாகிவரும் படங்கள் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X