Allu Arjun: புஷ்பா 2 படத்திற்காக சம்பளம் வாங்காத அல்லு அர்ஜூன்.. ஆனாலும் கல்லா கட்டிட்டாரே!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு சிறந்த என்டர்டெயின்மெண்டை கொடுத்து வருகிறார்.

இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிக்களை கவர்ந்துவரும் சூழலில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் மாஸ் ஹிட் கொடுத்தது.

Actor Allu Arjun salary details in Pushpa 2 movie revealed

இந்தப் படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்திலும் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன்: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா படம். இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். எதிர்பார்த்ததை காட்டிலும் புஷ்பா படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. குறிப்பாக இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடிய ஊ சொல்றியா பாடல் பின்னி பெடலெடுத்தது.

புஷ்பா படம்: சுகுமார் இயக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருந்த இந்தப் படம் சிவப்பு சந்தன மரக்கடத்தைலை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் அல்லு அர்ஜூன் -ராஷ்மிகா காதல் உள்ளிட்ட பல சுவாரஸ்யங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன. அல்லு அர்ஜூன் கேரியர் பெஸ்ட் படமாகவும் புஷ்பா அமைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகும் புஷ்பா 2: முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ முதலானவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப் படமும் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜூன் சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம் வாங்காத அல்லு அர்ஜூன்: என்னது சம்பளம் இல்லாமல் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். சம்பளம் இல்லாமலேயே கல்லா கட்டும் வித்தையை இந்தப் படத்தில் அவர் அல்லு அர்ஜூன் பயன்படுத்தியுள்ளார். படத்தின் லாபத்தில் 33 சதவிகிதம் சம்பளமாக வாங்க ஒப்பந்தமிட்டுள்ளாராம் அல்லு அர்ஜூன். மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள புஷ்பா 2 படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்று கூறப்படுமநிலையில், இது நிகழ்ந்தால் அவருக்கு 330 கோடி ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வசூலில் பர்சென்டேஜ்: மாறாக படத்தின் வசூல் குறைந்தாலும் 300 கோடி வரை அவருக்கு சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்படும் இந்த வெற்றி சாத்தியப்பட்டால், தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நபராக அல்லு அர்ஜூன் மாறிவிடுவார். ரஜினி, அஜித், விஜய்யை காட்டிலும் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக அல்லு அர்ஜூன் மாறுவார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X