நான் மிகப்பெரிய மைக்கேல் ஜாக்சன் ரசிகன்.. அல்லு அர்ஜுன் நடனங்களில் வெளிப்படும் ஸ்டைல்!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
இவரது பல படங்கள் தெலுங்கில் ஹிட் அடித்து மிகச்சிறந்த ரசிகர்கள் வட்டத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அலா வைகுந்த புரமுலு, புஷ்பா போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தெலுங்குத் திரையுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இதனால் இவர் எவர்கிரீன் சூப்பர் ஹிட் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்
இவரது ஆர்யா, ஆர்யா 2, சங்கர் தாதா ஜிந்தாபாத், வருடு, வேதம், ரேஸ் குர்ராம், அலா வைகுந்த புரமுலு உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. இதையடுத்து இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரிலீசான புஷ்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.

சிறப்பான டான்ஸ்
சுகுமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி என்று பாடும்போது, கையையும் காலையும் வளைத்து சிறப்பான ஒரு நடன அசைவை வெளிப்படுத்தியிருப்பார். இது மிகவும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. மேலும் படத்தில் மிரட்டலான கெட்டப்புடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இரண்டாம் பாகத்திற்கு வெயிட்டிங்
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் இந்தப் படத்தில் மிகவும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், திரைக்கதை இருக்கும் என்று சுகுமார் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்
அல்லு அர்ஜுனின் ஒவ்வொரு படத்திலும் பாடல்களில் சிறப்பான டான்ஸ் மூவ்மெண்ட்சை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது நடனங்கள் மூலமும் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே தான் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன் என்று அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சனின் பாதிப்பு
சிறு வயதிலிருந்தே தன்னுடைய நடனத்தில் மைக்கேல் ஜாக்சனின் ஸ்டைல் இணைந்து இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரின் பாதிப்பு தன்னுடைய அனைத்து மூவ்களிலும் வெளிப்படும் என்றும் அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார். அவரின் ஒருசில படங்களில் இந்த மூவ்மெண்ட்ஸ் இருந்த நிலையில் தற்போது அதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











