மொட்டை தலை… முறுக்கு மீசை… வாடிவாசல் படத்திற்காக காட்டுத்தனமாக மாறிய அமீர்!

சென்னை : தமிழ் சினிமாவே கொண்டாடும் பிரபல இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் அமீர். இவர் இதற்கு முன்பு வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கேரக்டரில் நடித்திருந்தார்.

வாடிவாசல் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து உடலை ஏற்றி வருகிறார் அமீர்.

பொல்லாதவன்

பொல்லாதவன்

பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் தனது முதல் படத்திலே, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றார். இளைஞர்களுக்கு பைக் மீதான காதலை தனுஷை வைத்து இவர் இயக்கிய 'பொல்லாதவன்' படம் ஜனரஞ்சகமாகவும், ரசிக்கும்படியாகவும் சொல்லியிருந்தது. அதனை தொடர்ந்து சேவல் சண்டையை மையமாக வைத்து தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை இயக்கினார்.

செம ஹிட் படங்கள்

செம ஹிட் படங்கள்

மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அமையும் படங்கள் அனைத்துமே செம ஹிட் அடித்து வருகிறது. இப்படி பல ஹிட் படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் பல படங்களை தயாரித்தும் உள்ளார். அதன் அடிப்படையில் பொறியாளன், நான் ராஜாவாக போகிறேன், மிக மிக அவசரம், காக்கா முட்டை, அண்ணனுக்கு ஜே, லென்ஸ், உதயம் என்எச்4, கொடி, சங்கத்தலைவன் ஆகிய படங்கள் அவர் தயாரிப்பில் உருவானவை.

விடுதலை

விடுதலை

வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணையவன் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது. இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

மொட்டை தலையுடன் அமீர்

மொட்டை தலையுடன் அமீர்

சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. சூர்யா தற்போது நடித்து வரும எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து இப்படத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில், அமீர், மருதன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இது படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாம். இந்த கேரக்டருக்காக மொட்டை தலை, முறுக்கு மீசை, கட்டுமஸ்தான உடல் என பார்ப்பதற்கே பயங்கர தோற்றத்தில் அமீர் காட்சியளித்திருந்தார்.

Recommended Video

VadaChennai Prequel: வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இனையும் Ken Karunas | Rajan Vagaiyara
அதிகாரம் படத்தில்

அதிகாரம் படத்தில்

இயக்குனர் வெற்றி மாறனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் படம் அதிகாரம். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில் இயக்கி வருகிறார். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகராக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ்.கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X