9500 ரூபாய் தான் எனக்கு சம்பளம்.. கிரெடிட் கார்டால் ஆர் ஜே பாலாஜி வேதனை
சென்னை: ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை துவங்கியவர் ஆர்.ஜே பாலாஜி. இவர், திரைத்துறையில் தனக்கு கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி அதன் பிறகு காமெடி நடிகராக மாறி உள்ள இவர், முதன் முதலில் வாங்கிய சம்பளம் ஒன்பது ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றும், அந்த பணத்தை கொண்டு குடும்பத்தை சமாளிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட நானும் ரவுடி தான் என்ற திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்திருந்தார். அந்த படத்தில் டைமிங்கில் இவர் நடித்த காமெடியைப் பார்த்து ரசிகர்கள் ஆர்.ஜே பாலாஜியின் ரசிகர்களாக மாறிவிட்டனர். அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

ஆர்.ஜே பாலாஜி: இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், தீயா வேலை செய்யணும் குமாரு, வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி என அடுத்த படங்களில் நடித்து வந்த இவர், LKG என்ற திரைப்படத்தின் மூலம் அவர் தனித்து நாயகனாக நடிக்க தொடங்கினார். அதன்பிறகு, இயக்குநர் அவதாரம் எடுத்து இவர், நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இதையடுத்து, வீட்டில விசேஷம், ரன் பேபி ரன் என அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகிறார்.
சிங்கப்பூர் சலூன்: அண்மையில் இவர் நடிப்பில், சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கள் இயக்குனர் கோகுல் அவர்களுக்கு ஒரு தங்க சங்கிலியை பரிசளித்தார். முன்னதாக, சிங்கப்பூர் சலூன் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆர்.ஜே பாலாஜி, தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டம் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்.
மூனு பர்சனல் லோன்: அதில், என்னுடைய மாத சம்பளம் 9,500 ரூபாய், மூனு பர்சனல் லோன், தங்கச்சி கல்யாணம், டூவீலர் லோன், படிப்புக்கு லோன் வாங்கி இருந்தேன். இது தவிர என்னிடம் கிரெடிட் கார்டு இருந்தது. இந்த மொத்த லோனையும் அடைக்க எனக்கு மாசத்திற்கு ரூ 35 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். ஆனால், என் சம்பளம் ரூ.9,500 தான். இதற்காக கிரெடிட் கார்டை வைத்து கடன் வாங்குனேன். என் கிரெடிட் கார்டு மட்டும் இல்லாமல் பிரெண்ட் கார்டை வைத்தும் கடன் வாங்கினேன்.
மொத்தமும் காலி: இதனால், ஒவ்வொரு மாசமும் பைத்தியம் புடிச்ச மாதிரி இருப்பேன், சம்பளம் வந்த பத்து நிமிஷத்துல மொத்தமும் காலி ஆகிவிடும். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமா நான் பிரபலமானேன். அப்போது தான் என் பண பிரச்சனை தீர்ந்தது. அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடத்தால், கிரெடிட் கார்டை உடைத்தேன் என்று ஆர்.ஜே பாலாஜி வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











