மோகன்லாலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது எப்படி? உடன் நடித்த நடிகர் விளக்கம்

By

துபாய்: நடிகர் மோகன்லாலுக்கு கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு காரணம் என்ன என்பதை அவருடன் நடித்த நடிகர் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள ஹீரோ மோகன்லால். இவர் தமிழில், கோபுர வாசலிலே, இருவர், ஜில்லா, காப்பான் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளத்தில் நடித்துள்ள படம், பிக் பிரதர். சித்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அர்பாஸ் கான், அனூப் மேனன், ஹனி ரோஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள, மலையாள படம் இது.

பேஸ்புக்கில் நன்றி

பேஸ்புக்கில் நன்றி

அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் மோகன்லால், பேஸ்புக்கில் டாக்டர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

பர்ஜில் மருத்துவமனை

பர்ஜில் மருத்துவமனை

அதில், அவர் கையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. அதற்கு கீழே, என் கையை பத்திரமாகப் பார்த்துக் கொண்டதற்கு துபாய் பர்ஜீல் மருத்துவமனை டாக்டர் புவனேஷ்வர் மச்சானிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சை

அறுவைச் சிகிச்சை

என்ன அறுவை சிகிச்சை, எதற்காக சிகிச்சை என்பதை மோகன்லால் தெரிவிக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே அவர் கையில் காயத்துடன் இருந்து வந்தார். சில நிகழ்ச்சிகளில் கையில் பேண்டேஜுடன் கலந்துகொண்டார்.

அனூப் மேனன்

அனூப் மேனன்

இதையடுத்து அவர் துபாய் சென்று ஆபரேஷன் செய்தார். அவர் விரைவாக குணமாக, ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர் கையில், எப்படி எலும்பு முறிவு ஏற்பட்டது என்பதை அவருடன் நடித்த அனூப் மேனன் தெரிவித்துள்ளார்.

துபாயில் விபத்து

துபாயில் விபத்து

'பிக்பிரதர்' படப்பிடிப்பில் தொடர்ந்து ஆக்‌ஷன் காட்சிகளில் மோகன்லால் நடித்துவந்தார். அப்போது அவரை சந்தித்து கை கொடுத்தேன். அவர் கையில் வலி இருப்பதாகச் சொன்னார். விசாரித்தபோது, துபாயில் நடந்த விபத்து ஒன்றில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது என்று சொன்னார்.

நஷ்டமாகும் என்பதால்

நஷ்டமாகும் என்பதால்

ஆனால் அதுபற்றி படத் தயாரிப்பாளரிடமோ, இயக்குனரிடமோ தெரிவிக்கவில்லை. சொன்னால், ஷூட்டிங்கை கேன்சல் செய்வார்கள், இதனால் நஷ்டம் ஏற்படும் என்பதால் சொல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார். பிறகு துபாய் சென்று அறுவைச் சிகிச்சை செய்தார் என்றார் அனூப் மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X