எந்த ஆதாரமும் இல்லை.. நடிகை அளித்த பாலியல் புகாரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் விடுதலை!

சென்னை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் புகாரில் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். மலையாள மொழியில் வெளியான சினிமா கம்பெனி என்ற படத்தின் மூலம் சினமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன், கன்னட மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

அர்ஜூன் மீது பாலியல் புகார்

அர்ஜூன் மீது பாலியல் புகார்

தமிழில் நிலா, நிபுணன், சோலோ, அமெரிக்கா மாப்பிள்ளை, வதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இந்நிலையில் நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு மீடுவில் புகார் கூறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யாரும் இப்படி கூறியதில்லை.

யாரும் இப்படி கூறியதில்லை.

இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் சமரச பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்ற அர்ஜுன், தான் சமரசமாக போகத் தயாரில்லை என்றார். மேலும் தான் இதுவரை 70க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் நடித்திருப்பதாகவும் ஆனால் இதுவரை தன்மீது யாரும் இப்படி ஒரு புகாரை கூறியது இல்லை என்றும் கூறினார்.

அர்ஜூன் மீது வழக்குப்பதிவு

அர்ஜூன் மீது வழக்குப்பதிவு

மேலும் 5 கோடி ரூபாய் கேட்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகர் அர்ஜூன். ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸார் அறிக்கை

போலீஸார் அறிக்கை

இதுகுறித்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் ஆதாரமற்றது என்று பெங்களூரு போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

Recommended Video

Meghana Raj Son First மொட்டை | No Shave November, Arjun Sarja, Chiranjeevi Sarja
நடிகர் அர்ஜூன் விடுதலை

நடிகர் அர்ஜூன் விடுதலை

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கில் இருந்து நடிகர் அர்ஜூனை விடுதலை செய்து உத்தரவிட்டனர். நடிகர் அர்ஜூன், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழி படங்களை கை வசம் வைத்துள்ளார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X