சமூக வலைத்தளங்களை பயனுள்ளதாக்குகள். .அஜித்,விஜய் ரசிகர்களுக்கு அர்ஜுன் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா மற்றும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதை பற்றி நடிகர் அர்ஜுன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
Recommended Video
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆக்ஷனில் கலக்கியவர் தான் அர்ஜுன், இதனாலேயே இவருக்கு ஆக்ஷன் கிங் என்று பெயரை ரசிகர்கள் கொடுத்தனர். தனது படங்களில் அதிகம் இந்தியா தாய் நாடு அதற்காக போராடுவது என நடித்து வந்த இவர், படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் அதனை பல முறை வெளிப்படுத்தியுள்ளார், அந்த வகையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அவர் கூறுகையில்

அனைவருக்கும் நான் வைக்கும் தாழ்மையான வேண்டுகோள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இதனை கடைபிடியுங்கள், மேலும் இதனை கட்டுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான அனைத்தையும் செய்து வருகின்றன ஆனால் அரசாங்கம் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அரசாங்கத்திற்கு உதவி செய்ய வேண்டும்.
இந்த வைரஸ் தும்மினால் மற்றும் பக்கத்தில் இருந்தால் இருமினால் பரவும் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம், ஆனால் தற்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் கிடைத்த தகவல் காற்றில் கூட இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தான் நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே செல்லும் போது முகத்தில் மாஸ்க் கட்டி செல்லுங்கள் இதனை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.
நான் இன்று காலை என் நண்பர் ஒருவர் இத்தாலி நாட்டில் உள்ளார் அவரிடம் பேசுகையில் அவர் கூறியது, அந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு 5,500 முதல் 6,000 பேர் பாதிக்கப்படுவதாக கூறினார், மேலும் அங்கு உயிரிழப்பவரின் எண்ணிக்கை 5,50 முதல் 600 ஆக உள்ளது என தெரிவித்தார். இது போன்ற விஷயங்கள் இந்தியாவில் நடக்க கூடாது அது உங்கள் கையில் தான் இருக்கிறது.

நான் ஒரு சினிமாகாரன் என்பதால், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் ரசிகர்கள் தமிழ் நாட்டில் அதிகமாக இருப்பார்கள் அவர்கள் நினைத்தால் இதனை தடுக்க முடியும். மன்றங்கள் மற்றும் அதன் தலைவர்கள் சமூக வலைதளங்களை இந்த சமயத்தில் சரியாக பயன்படுத்தி வெளியே செல்ல வேண்டாம் என்று தேவையான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த நடிகர் மேல் அன்பு வைத்து இருப்பீர்கள் அதனை இதில் காட்டுங்கள் வெளியே செல்லாமல் இருங்கள்.
நான் கூறிய அனைத்தையும் ஒரு வேண்டுகோளாக எடுத்து கொள்ளுங்கள், மேலும், யாரும் வெளியே வராதீர்கள். இந்த வைரஸ் பரவுவதை தடுங்கள் என்று அவர் பேசிய வீடியோவில் பதிவு செய்யதுள்ளார் நடிகர் அர்ஜுன்.


Click it and Unblock the Notifications











