கேக் வெட்டி கொண்டாட்டம்... அருண் விஜய் பேமிலி கொண்டாடிய நாய் பிறந்தநாள்

சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் யானை படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் நடிகர் அருண் விஜய்.

இந்நிலையில் தான் வளர்த்துவரும் நாய் ருத்ராவின் பிறந்தநாளை அருண் விஜய் குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் சிறப்பான நடிகராக திகழ்ந்து வருகிறார். தேர்ந்தெடுத்த கதைகளில் இவர் நடித்து வருகிறார். அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் சிறப்பான பெயரையும் விமர்சனங்களையும் இவருக்கு பெற்றுத் தந்து வருகின்றன.

யானை படம்

யானை படம்

தற்போது இவரது நடிப்பில் ஹரி இயக்கியுள்ள யானை படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங், டப்பிங் உள்ளிட்டவற்றை முடித்துள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.

ரிலீஸ் குறித்த அறிவிப்பு

ரிலீஸ் குறித்த அறிவிப்பு

விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

ஹரியின் சிங்கம் படங்களின் வரிசை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது யானை படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹரி. இந்தப் படமும் அவரது ஹிட் படங்களின் வரிசையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் நடிகர் அருண் விஜய் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் தனது வீட்டின் மற்றும் படங்களின் முக்கிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுடன் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் உள்ளார்.

சினம் படம்

சினம் படம்

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் உள்ளத்தை அள்ளுகிறது. மேலும் அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சினம் படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. விரைவில் அந்தப் படமும் ரிலீசாகவுள்ளது.

நாய் பிறந்தநாள்

நாய் பிறந்தநாள்

இந்நிலையில் அவர் தனது வீட்டில் வளர்த்துவரும் ருத்ரா என்ற நாயின் 4வது பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவரது மகன் மற்றும் மகளுடன் அவர் ருத்ராவிற்கு பிறந்தநாள் கேப் மாட்டி, கேக் வெட்டி, கேக் ஊட்டிவிட்டு மகிழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X