Actor Arun Vijay: விஜயகுமார் வீட்டு திருமண கொண்டாட்டம்.. பயங்கர உற்சாகத்தில் அருண்விஜய்!
சென்னை: நடிகர் விஜயகுமார் தொடர்ந்து ஹீரோவாகவும் வில்லனாகவும் பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்பொழுதும் இவர் தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார். விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா திருமணம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்டில் நடந்துள்ளது, மிகவும் பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் செலவில் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தியா மற்றும் புது மாப்பிள்ளை திலன் இருவரும் க்யூட்டான ஆடிய நடனம் உள்ளிட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன
விஜயகுமார் மற்றும் முத்துக்கண்ணு தம்பதிக்கு பிறந்தவர்கள் கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய். இவர்களில் அனிதா விஜயகுமார் டாக்டர். இவர் கோகுல கிருஷ்ணன் என்ற டாக்டரை திருமணம் செய்து கத்தாரில் செட்டில் ஆனவர். இவர்களின் மகள் தியாவும் மருத்துவர். இவருக்குத்தான் தற்போது திருமணம் நடந்துள்ளது. தியா மற்றும் திலனுக்கு கடந்த ஆண்டு டிசம்பரிலேயே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கடந்த 19ம் தேதி இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

விஜயகுமார் பேத்தி திருமணம்: நடிகர் விஜயகுமார் ஹீரோவாக தன்னுடைய கேரியரை துவங்கி, வில்லனாக, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகுமார், .தற்பொழுதும் நடிப்பை தொடர்ந்து வருகிறார். விஜயகுமார் மற்றும் முத்துக்கண்ணு தம்பதியின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா திருமணம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்டில் திலன் என்பவருடன் தியாவின் திருமணம் நடந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் செலவில் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து: இந்த திருமணத்தில் விஜயகுமாரின் மகள்கள் கவிதா, பிரீத்தா மற்றும் அருண் விஜய் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இந்த திருமணத்தின் அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்கிரமித்துள்ளன. திருமணத்தின்போது தாய் மாமனான அருண் விஜய், தியாவின் கையை பிடித்து அழைத்து வந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உற்சாகத்தில் அருண் விஜய்: இந்த திருமணத்தின் பல நிகழ்வுகளும் மிகவும் கலர்புல்லாக அனைவரையும் கவரும்வகையில் அமைந்திருந்தது. திருமணத்தின் தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்ற அருண் விஜய், மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அனைவருடனும் இணைந்து அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. மணமகள் தியா மற்றும் மணமகன் திலன் இருவரும் இணைந்து திருமணத்தின்போது ஆடிய க்யூட் நடனமும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. இந்த வீடியோக்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் காணப்பட்டது.

கலர்புல் கொண்டாட்டம்: இந்த திருமணத்திற்கு வனிதாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் விஜயகுமாரின் மனைவிகள் முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா இருவரின் மகள்களும் அருண் விஜய்யும் இந்த திருமணத்தில் மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர். தன்னுடைய சகோதரிகளுடன் எப்போதுமே நல்ல உறவுநிலையை மெயின்டெய்ன் செய்து வருகிறார் அருண் விஜய். இவர்களின்அடுத்தடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த திருமணமும் அவர்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











