சினம் டப்பிங் பணிகளை முடித்தார் அருண் விஜய்!!

சென்னை: நடிகர் அருண் விஜய் இப்போது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்

அந்த வகையில் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் தற்போது சினம் என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்

அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள சினம் படத்தின் டப்பிங் பணிகள் முடித்து விட்டதாக அட்டகாசமான அப்டேட்டை அருண் விஜய் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஆக்சன் கதைகளில்

ஆக்சன் கதைகளில்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை தொடர்ந்து திருப்திப்படுத்தி வருகிறது. குறிப்பாக இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக இவர் தொடர்ந்து ஆக்சன் கதைகளில் நடித்து வருவதால் இவருக்கென்றே ஏற்றது போல கதைகள் வந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் சினம் என்ற படத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார்.

மிடுக்கான தோற்றத்தில்

மிடுக்கான தோற்றத்தில்

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அசத்தும் அருண் விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். தனக்கே உரித்தான மிடுக்கான தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடமே படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தான் கொரோனா மிக வேகமாக அதிகரிக்க தொடங்கி பின் தயாரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முழு வீச்சுடன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

சினம்

சினம்

சினம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடித்து வருகிறார். மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஷபீர் இசை அமைத்துள்ளார். அருண் விஜய்க்கு என்றே செய்து வைத்தது போல பக்கா அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

டப்பிங் பணிகளை முடித்தார்

டப்பிங் பணிகளை முடித்தார்

இந்த நிலையில் அருண்விஜய் சினம் படத்தின் முக்கிய அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். யானை, பார்டர்,பாஸ்கர்,அக்னி சிறகுகள் என கைவசம் அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் சினம் படத்தின் டப்பிங் பணிகளை அருண் விஜய் தற்போது முடிந்துள்ளதாக அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார் . தயாரிப்பு பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வரும் சூழலில் மிக விரைவிலேயே டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X