Arun Vijay: அஜித் அத நினைச்சிட்டாருன்னா.. ஷாலினியிடம் சொன்ன விஷயம்.. அருண் விஜய் ஓபன்!
சென்னை: நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்ததாக பாலா இயக்கத்தில் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில் அவர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக கடந்த 2015ம் ஆண்டில் அஜித்துடன் இணைந்து கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். இந்தப் படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது வில்லனாக நடித்திருந்தாலும் ஹீரோவிற்கு சமமான கேரக்டரில் இந்தப் படத்தில் அவர் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் 90களிலேயே நடிக்க வந்தாலும் தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்த அதிகமான ஆண்டுகள் ஆகியுள்ளது. அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்துவரும் அருண் விஜய் அடுத்ததாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பாலா மற்றும் அருண் விஜய் ஈடுபட்டு வருகின்றனர். பல சுவாரஸ்யங்களையும் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் அருண் விஜய். அந்த அனுபவங்களையும் அவர் அடுத்தடுத்து பகிர்ந்து வருகிறார்.
பாலா சொன்ன விஷயம்: தன்னுடைய ஒவ்வொரு படமும் தனக்கு வித்தியாசமான அனுபவங்களை கொடுத்ததாகவும் ஆனால் தடையற தாக்க படம் முற்றிலும் மாறுபட்ட முகத்தை தனக்கு கொடுத்ததாகவும் இந்தப் படத்தை தொடர்ந்துதான் என்னை அறிந்தால், செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் தனக்கு அமைந்ததாகவும் அருண் விஜய் கூறியுள்ளார். தற்போது நடித்துள்ள வணங்கான் படத்திலும் தன்னை வித்தியாசமாக பாலா வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கதையை தன்னிடம் கூறியவுடன் முதலில் வொர்க் அவுட் செய்ய வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாகவும் அருண் விஜய் பகிர்ந்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளாக அதை செய்யவில்லை: அந்த கேரக்டருக்கு அதுபோன்ற ஒரு உடல்மொழி தேவைப்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தான் வொர்க் அவுட் செய்யவில்லை என்றும் அதுதான் தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் அருண் விஜய் மேலும் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதற்கான காரணம் பின்புதான் தெரியவந்ததாகவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார். இதனிடையே அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் அவரது அதிரடி மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருண் விஜய், என்னை அறிந்தால் காலத்திலிருந்தே தான் அஜித்தை பார்த்து வருவதாகவும் அவர் எதையும் தீவிரமாகவே செய்வார் என்றும் பாராட்டியுள்ளார்.
அஜித்தின் தீவிரம்: ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் அதன் எல்லை வரை சென்று அதை செய்து முடிப்பார் என்றும் அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தான் ஒரு நிகழ்ச்சியில் அவரை பார்த்தபோது, பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தில் கமிட்டாகியுள்ளதாக கூறியதாகவும் இதையடுத்து மிகவும் உற்சாகத்துடன் தனக்கு வாழ்த்து சொன்ன அஜித், அருகில் இருந்த ஷாலினியையும் கூப்பிட்டு அதே உற்சாகத்துடன் அவரிடம் விஷயத்தை கூறியதாகவும் அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











