ஹாலிவுட் ரேஞ்சுக்கு கலக்கும் ..அதிரடி ஆக்சன் நாயகனின் நியூ லுக் !

சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் அனைவரையும் அசர வைத்து வருபவர் நடிகர் அருண்விஜய்.

வெறித்தனமான நடிப்பு வியக்க வைக்கும் கட்டுடல் வித்தியாசமான கதை தேர்வு என தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக வளர்ந்து வருகிறார்.

செக்கச்சிவந்த வானம், சாகோ, மாபியா உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இவர் நடித்து வரும் அடுத்தடுத்து திரைப்படங்களின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில் இப்பொழுது ஹாலிவுட் ஹீரோ போல வித்தியாசமான லுக்கில் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

பக்குவப்பட்ட நடிகராக

பக்குவப்பட்ட நடிகராக

சினிமாவில் தொடர் தோல்விகளையும் தொடர் வெற்றிகளையும் பார்த்து இப்பொழுது பக்குவப்பட்ட நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அருண் விஜய் தனது அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் பலரையும் வியக்க வைத்து வருகிறார்.

அதிரடி இயக்குனர்

அதிரடி இயக்குனர்

சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம், சாகோ, மாபியா போன்ற திரைப்படங்களில் படத்திற்கு படம் வேறுபடும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கலக்கி வரும் இவர் இப்பொழுது அதிரடி இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஹரியுடன் இணைந்து செம ஆக்சன் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் ரீமேக்

ஹிந்தியில் ரீமேக்

அருண் விஜய் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்தில் சமீபத்தில் வெளியான "தடம்" ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. மேலும் இதில் பிரபல இளம் ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாயின.

அக்னி சிறகுகள்

அக்னி சிறகுகள்

இவ்வாறு இவர் நடிக்கும் திரைப்படங்கள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் இப்போது பாக்ஸர், அக்னி சிறகுகள், சினம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன.

செம ஸ்டைலிஸான

செம ஸ்டைலிஸான

அதே சமயம் அவ்வப்போது புதுப் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வரும் அருண் விஜய் இப்பொழுது வெளியிட்டுள்ள செம ஸ்டைலிஸான வித்தியாசமான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அடுத்த படத்துக்கான கெட்டப்பா

அடுத்த படத்துக்கான கெட்டப்பா

ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சஸ்பென்ஸ் கில்லர் போல கையில் ஒரு பேக்கை வைத்துக் கொண்டு வித்தியாசமான கோட்டுடன் சஸ்பென்ஸ் கில்லருக்கே உரித்தான பொருத்தமான கதாபாத்திரம் போல இவர் வெளியிட்டு இருக்கும் இந்த வித்தியாசமான லுக் புகைப்படங்கள் வைரலாகி வருவதை தொடர்ந்து பலரும் இது அடுத்த படத்துக்கான கெட்டப்பா இருக்குமோ என யோசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X