ட்விட்டரில் 2 மில்லியன் பாலோயர்களை பெற்ற அருண் விஜய்... மகிழ்ச்சிப் பதிவு!
சென்னை : நடிகர் அருண் விஜய் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
ட்விட்டர் பக்கத்தில் இவர் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது 2 மில்லியன் பாலோயர்களை இவர் பெற்றுள்ளார்.

நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தொடர்ந்து சிறப்பான அதிரடி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தடம், செக்கச் சிவந்த வானம், குற்றம் 23 என இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்துள்ளது. தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்
தற்போது இயக்குநர் ஹரி டைரக்ஷனில் யானை உள்ளிட்ட படங்களில் அருண் விஜய் நடித்து வருகிறார். கிராமத்து சூழ்நிலையில் படம் உருவாகி வருகிறது. நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் அருண் விஜய்க்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகி உள்ளார்.

தீபாவளிக்கு வா டீல் ரிலீஸ்
மேலும் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இவரது வா டீல் படமும் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்களுடன் வா டீல் படமும் மோதவுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
இதேபோல தற்போது ஓ மை டாக், சிறகுகள், பார்டர், பாக்சர், சினம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய். சமீபத்தில் பார்டர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படத்தில் ரெஜினா அருண் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார்.

2 மில்லியன் பாலோயர்கள்
பரபரப்பாக பல படங்களில் நடித்து வருவதை போலவே ட்விட்டர் பக்கத்திலும் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார் அருண் விஜய். அவ்வப்போது பிட்னஸ், படம் குறித்த செய்திகள் உள்ளிட்டவற்றை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அருண் விஜய்.

ரசிகர்கள் அன்பிற்கு நன்றி
இதற்கென ரசிகர்களின் அன்பிற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு தகவல்களை அவர் ட்விட்டர் மூலம் பகிர்வார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் சமீப காலத்தில் இவரது வளர்ச்சிக்கு ரசிகர்களே முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











