அருண் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ வெளியிட்டு பிரபல தயாரிப்பாளர் வாழ்த்து!

சென்னை : நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

அவருக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் சக நடிகர், நடிகைகளை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் பிரபல நடிகரான விஜய்குமாரின் மகன் என்ற அளவில் நடிகராக எளிதில் அறிமுகமானாலும் தன்னை திரைத்துறையில் நிலைநிறுத்திக் கொள்ள அவர் பல்வேறு போராட்டங்களை சந்தித்தார். நீண்ட நாட்கள் காத்திருப்பிற்கு பிறகே திரையுலகில் அவருக்கு வெற்றி சாத்தியமானது.

1994ல் அறிமுகம்

1994ல் அறிமுகம்

முறை மாப்பிள்ளை படத்தின்மூலம் அவர் கடந்த 1994ல் தமிழில் அறிமுகமானார். தற்போது தொடர்ந்து பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். அவருடைய படங்களின் வெற்றி அவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்து வருகிறது.

அஜித்தின் வில்லன்

அஜித்தின் வில்லன்

அஜித்துடன் வில்லனாக நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் இவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தில் இவரது வில்லத்தனத்திற்கான நியாயத்தை இயக்குநர் வெளியிட்டிருந்தது சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை வெற்றி நாயகனாக நிலைநிறுத்யுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் இன்றைய தினம் தனது 44வது பிறந்தநாளை அருண் விஜய் கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். மேலும் பிறந்தநாளையொட்டி பொதுவான டிபியையும் வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

தோழிகளின் தாலி கட்டும் நிமிடங்கள் | Chaithra Reddy, Shabana, Reshma Wedding
25 ஆண்டுகள் பயணம்

25 ஆண்டுகள் பயணம்

தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்ள இவருக்கு 25 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. அதுவரை பொருமையாக காத்திருந்து தன்னை நிரூபித்து ஏராளமான ரசிகர்களையும் தனக்கும் தன்னுடைய நடிப்பிற்கும் சொந்தக் காரராக மாற்றியுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் வாழ்த்து

தயாரிப்பாளர் தனஞ்செயன் வாழ்த்து

இந்நிலையில் அவரது பிறந்ததினத்தையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் அருண் விஜய். இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் தனஞ்செயன் அருண் விஜய்யின் மேஷ் அப் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X