திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்.. கூட்டத்தில் சிக்கி காலில் காயம்!
சென்னை: பழம் பெரும் நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய், திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்ய சென்று பக்தர்களின் கூட்டத்தில் சிக்கி காலில் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து பக்தர்களிடம் சிக்கிய அவரை மீட்டு பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர்.
நடிகர் அருண் விஜய், பாலாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள வணங்கான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய் உடன், ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின், ரிதா, சாயா தேவி, பாலா சிவாஜி, சண்முகராஜன், யோகன் சாக்கோ, கவிதா கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் பணியை சதிஷ் சூர்யா மேற்கொண்டுள்ளார்.

பாலாவின் வணங்கான்: இப்படத்தில் முதலில் சூர்யா நடித்திருந்த நிலையில், பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் விலகியதை அடுத்து, அந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என சுரேஷ் காமாட்சி போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தார். ஆனால், படம் வெளியீடு தேதி குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.
ரெட்ட தல: வணங்கான் படத்தைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய், ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, கதா நாயகிகளாக தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். 'ரெட்ட தல' படத்தின் இறுதிக்கட்ட சண்டை காட்சிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்தநிலையில், படப்பிடிப்பு ஓய்வின்போது வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்த நடிகர் அருண் விஜய், அங்கு ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அன்னையிடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் தந்தை திரைத்துறையில் நாட்டாமை படத்தில் முத்திரை பதித்தது போல் அதுபோல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என தெரிவித்தார்.
காலில் காயம்: இதைத்தொடர்ந்து, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவனை தரிசனம் செய்ய அருண் விஜய் சென்றார். அங்கு பக்தர்கள் பெருமளவில் இருந்ததால் அனைவரும் அவருடன் செல்ஃபி எடுக்க முண்டி அடித்துக்கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர். தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அருண் விஜய்யுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால், அருண் விஜய்யின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போலீசார் வந்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்து அழைத்து சென்று காரில் அவரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











