Arun vijay: எலும்பு முறிவு.. 2 மாதம் அவதி.. மகன் குறித்து கலங்கிய விஜயகுமார்.. அருண்விஜய் நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் அருண் விஜய் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற அடையாளம் இருந்தபோதிலும் அருண் விஜய்யின் வெற்றி போராடி பெற்றது. இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும்வகையில் அவரது அடுத்தடுத்த படங்கள் அமைந்து வருகின்றன. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். சூர்யாவை வைத்து இந்தப் படத்தை இயக்கிவந்த பாலா, அந்தப் படம் டிராப் ஆனதை தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த 12ம் தேதி பொங்கலையொட்டி வெளியான மிஷன் சாப்டர் 1 படமும் அருண் விஜய்க்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தீவிரவாதிகளின் சதியை லண்டனில் சென்று முறியடிக்கும் ஜெயிலராக இந்தப் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும் ஒரு குழந்தையின் தந்தையாகவும் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய், அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். சாக்லேட் பாயாக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கினாலும் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை சிறப்பான பல படங்களின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அருண் விஜய். அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து அதிகமான பெயரை பெற்ற அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு எலும்பு முறிவுகள் மற்றும் தசைநார் கிழிந்ததால் கடந்த 2 மாதங்களாக அவர் அவதிப்பட்டு வந்தார். மிஷன் சாப்டர் 1 படத்தின் பிரமோஷன்களின்போதுகூட காயத்துடன்தான் பங்கேற்றார். இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூட்டிங்கில் விபத்து: இந்நிலையில் தன்னுடைய காயம் குறித்து பேசிய அருண் விஜய், இன்னும் சில தினங்களில் தன்னுடைய காயம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். கடந்த 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசான அவரது மிஷன் சாப்டர் 1 படம் மிக சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், அருண் விஜய், இந்தப் படத்தின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். சண்டைக் காட்சிகளில் தனக்கு ஏற்பட்ட எலும்பு முறிவால் 2 மாதங்களாக தான் அனுபவித்த வலியை மிஷன் சாப்டர் 1 படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பால் மறக்க செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் அன்பிற்கு நன்றி: ரசிகர்களின் அன்பு, தன்னை மீண்டும் அதிக வலிமையாக மாறி ஆக்ஷனில் களமிறங்க செய்யும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதனிடையே அலங்காநல்லூரில் இன்று துவங்கப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியையும் நேரில் கண்டுகளித்த அருண் விஜய், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக உற்சாகத்துடன் தெரிவித்தார். மிஷன் சாப்டர் 1 படத்தின் தியேட்டர் விசிட்டிற்காக மதுரை வந்ததாக கூறிய அருண் விஜய், ஜல்லிக்கட்டு தொடர்பான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசையையும் வெளிப்படுத்தினார்.
அருண் விஜய்யின் வணங்கான்: தன்னுடைய படங்களின் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதை கொள்கையாக வைத்துள்ளதாகவும் அதேபோல தான் மிஷன் சாப்டர் 1 படத்திலும் டூப் போடாமல் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிஷன் சாப்டர் 1 படம் நல்ல கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய்யின் நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது வணங்கான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











