சிக்ஸ் பேக்குடன் கெத்தாக போஸ் கொடுத்த அருண்விஜய்…. பார்த்து பார்த்து ரசிக்கும் ரசிகைகள் !
சென்னை : நடிகர் அருண்விஜய் உடற்பயிற்சியில் மிகவும் ஈடுபாடு கொண்டாவர் எப்போது நேரம் கிடைத்தாலும் கண்டமேனிக்கு உடற்பயிற்சி செய்வார்.
தற்போது இவர், இன்ஸ்டாவில் சிக்ஸ் பேக்கில் செம மாஸாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை அவரது ரசிகைகள் ரசித்து ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.

விடா முயற்சி
திரைத்துறையில் 400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய் திரைத்துறையில் மிக முக்கியமான இளம் நடிகராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.

சுமாரான வரவேற்பு
இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

கைவசம் பல படங்கள்
மாஃபியா படத்தைத் தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் திரைப்படத்திலும், ஹரி இயக்கத்தில் தயாராகி வரும் AV 33 படத்தில் நடித்து வருகிறார் அருண்விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

சிக்ஸ் பேக்
என்னத்தான் படங்களில் பிஸியாக நடித்தாலும் இரவில் எவ்வளவு நேரம் ஆனாலும் உடற்பயிற்சி செய்வதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். உடற்பயிற்சியால் தனது உடலை கட்டுகோப்பாக வைத்துள்ள அருண்விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிக்ஸ் பேக்கை காட்டிக்கொண்டு செமயாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகைகள் ரசித்து ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











