twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    25 ஆண்டு போராட்டம்… தன்னம்பிக்கை நாயகன் அருண்விஜய்.. ஒரு ஸ்பெஷல் சர்வே!

    |

    சென்னை : தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் போராடி, பலத் தடைகளைத்தாண்டி இன்று வெற்றி எனும் கனியை ருசித்து வருகிறார் அருண்விஜய்.

    வாரிசு நடிகர், அப்பாவின் துணையால் எளிதில் திரைத்துறையில் நுழைந்து விட்டார் என பல விமர்சனங்கள் வந்த போதும் அவை அனைத்தையும் புறம் தள்ளி, துளியும் துவண்டு போகாமல் தொடர்ந்து போராடி, இன்று ஜாம்பவானாக வலம் வருகிறார் அருண்விஜய்.

    தொடர் தோல்விகள், ராசி இல்லாத நாயகன் என்ற மன வலியை கடந்து இன்று ஆக்ஷன் ஹீரோவாக வெள்ளித்திரையில் மின்னுகிறார். அருண்விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர் கடந்து வந்த பாதை பற்றி ஒரு சுவாரசியமான அலசல்..

    வட போச்சே.. நக்கட்ஸ் நக்கட்ஸ்ன்னு நாக்கை தொங்கப் போட்டு.. மொத்தத்துக்கும் வேட்டு வச்சிட்டாளே!வட போச்சே.. நக்கட்ஸ் நக்கட்ஸ்ன்னு நாக்கை தொங்கப் போட்டு.. மொத்தத்துக்கும் வேட்டு வச்சிட்டாளே!

     வெற்றி பெறவில்லை

    வெற்றி பெறவில்லை

    சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் அருண்குமார். பின்னாளில் தனது பெயரை அருண்குமார் என்று மாற்றிவைத்துக்கொண்டார். அந்த படத்தில் அமுல் பேபி போல நல்ல கொழுக்கு கொழுக்கென இருந்தார் அருண்விஜய். மணிவண்ணன், செந்தில், கவுண்டமணி என படம் முழுக்க நகைச்சுவைக்கு சிறிதும் பஞ்சமில்லால் படம் கலகலப்பாக செல்லும் இருப்பினும் இந்த படம் எதிர்பார்த்தை வரவேற்பை அருண்விஜய்கு பெற்றுத்தரவில்லை.

     அனைத்தும் தோல்வி

    அனைத்தும் தோல்வி

    முறை மாப்பிள்ளை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. பிரியம், கங்கா கௌரி, காத்திருந்த காதல், துள்ளித் திரிந்த காலம், கண்ணால் பேசவா போன்ற படங்களும் எதிர்பார்த்த அளவு நற் பெயரை இவருக்கு பெற்றுத்தரவில்லை.

     பெரிய ஏமாற்றம்

    பெரிய ஏமாற்றம்

    சேரன் இயக்கிய 'பாண்டவர் பூமி' அருண்விஜய்க்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'பாண்டவர் பூமி' வெற்றி பெற்ற படம் தான் என்ற போதிலும், இதில் அருண்விஜய் தனது கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து அழகாக நடித்திருப்பார். தோழத் தோழ பாடலும் படத்திற்கு உயிர் கூட்டி இருக்கும் இருப்பினும் அந்த படம் அருண்விஜய் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய ஏமாற்றத்தை தந்தது.

     ராசி இல்லை

    ராசி இல்லை

    இயற்கை, ஜனனம், அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறது, தவம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டு இருந்த போதும் இவரால் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை. தந்தை விஜயகுமாரால் தான் இவர் எல்லாம் நடிகரானார். வாரிசு என்ற பெயர்ல நடிகராகலாம் ஆனால், வெற்றி பெற தனி திறமை வேணும்பா, உனக்கு ராசி இல்லப்பா என முகத்திற்கு முன் வசைப்பாடியவர்களை மனதில் வலியோடு கடந்து சென்றார் அருண்விஜய்.

     அதாரு காட்டினார்

    அதாரு காட்டினார்

    பொறுத்தார் பூமி ஆழ்வார் என்ற நன்மொழிக்கு ஏற்ப அஜித்துடன் நினைந்து "என்னை அறிந்தால்" படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து ரணகளப்படுத்தி இருப்பார். அஜித்துக்கு முன்னால் அசால்ட்டாக நடித்து அசத்திய அருண்விஜய்க்கு இப்படம் ஒரு கம் பிரேக் படமாக அமைந்தது. திரையில் அதாரு காட்டிய இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அருண் விஜய்க்கு இப்படி ஒரு மாஸா படத்தை ஏற்படுத்திக் கொடுத்து அவரை உச்சம் தொடவைத்து அழகு பார்த்தவர் நம்ம தல அஜித்.

     கவனமான கதை தேர்வு

    கவனமான கதை தேர்வு

    25 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி என்பதால் தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். குற்றம் 23ல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும், மணிரத்னம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்ம ஸ்டைலாக வெளியான செக்கசிவந்த வானம் படத்தில் ஒரு ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அடித்து தும்சம் செய்து இருப்பார் அருண்விஜய்.

     வித்தியாசமான நடிப்பு

    வித்தியாசமான நடிப்பு

    முழு ஆக்சன் ஹீரோவாக அருண்விஜயின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தடம். எழில், கவின் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார். ஆக்சன் , ரொமான்ஸ் என அனைத்திலும் புகுந்து விளையாடி படத்தின் மொத்த சுமையையும் தன் தோலில் தாங்கி நிறுத்தி இந்த படத்திலும் வெற்றி நாயகன் என்று வாகை சூடினார் அருண்விஜய்.

     தன்னம்பிக்கை நாயகன்

    தன்னம்பிக்கை நாயகன்

    கேங் லீடாராக மாஃபியா கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் நல்ல ஓப்பனிங் இருந்தது. பாக்ஸர், அக்னிச் சிறகுகள், என பல படங்கள் வெற்றி மாலை சூட வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. பல தடைகளை கடந்து, மன வலிகள், வெறுமை என அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி தன்னம்பிக்கை நாயகனாக ஜொலிக்கும் அருண்விஜய்க்கு ஒரு சல்யூட்.

    English summary
    Actor Arun Vijay Special Report
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X