முழங்காலில் காயம்.. வலி தாங்க முடியல.. ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அருண்விஜய் !
சென்னை : சண்டை காட்சியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் அருண்விஜய் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.
திரைத்துறையில் 400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய்.
இவர் திரைத்துறையில் மிக முக்கியமான இளம் நடிகராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.

அருண்விஜய்
பல தோல்விப்படங்களில் நடித்து துவண்டுபோன அருண் விஜய் தனது விடாது முயற்சியால் தொடர்ந்து போராடி இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் அருண் விஜய்யும் ஒருவராக இருக்கிறார். இவர் கடைசியாக ஹரி இயக்கத்தில் உருவான யானை படத்தில் நடித்திருந்தார். குடும்ப செண்டிமென்ட் கொண்ட இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, கேஜிஎப் புகழ் ராமச்சந்திர ராஜூ ஆகியோர் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

வலி குறையவில்லை
அருண் விஜய் தற்போது ஏ ல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் சண்டை காட்சியின் போது, அருண் விஜய் தவறி கீழே விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் வலி குறையாததால், வலியோடு அவதிப்பட்டு வந்த அருண்விஜய் கேரள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.

ஆயுர்வேத சிகிச்சை
இது குறித்து, அருண்விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாரம்பரிய ஆயுர்வேத முறையில் எனது முழங்காலுக்கு சிகிச்சை அளிப்பதால், மிகவும் நன்றாக உணர்கிறேன். எனது நான்காவது நாள் சிகிச்சையில் உள்ளேன். சிகிச்சை முடிந்து விரைவில் படப்பிடிப்புக்கு திரும்புவேன் என கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சண்டை காட்சியில் அதிரடி
என்னத்தான் படங்களில் பிஸியாக நடித்தாலும் இரவில் எவ்வளவு நேரம் ஆனாலும் உடற்பயிற்சி செய்வதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். உடற்பயிற்சியால் தனது உடலை கட்டுகோப்பாக வைத்து இருக்கும் அருண் விஜய். சண்டை காட்சிகளில் டூப்பே இல்லாமல் அதிரடி காட்டி வருகிறார். யானை படப்பின்போது கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











