Mission Chapter 1: பாண்டிச்சேரியில் தியேட்டரில் படம் பார்த்த அருண் விஜய்.. அட இவ்வளவு ரெஸ்பான்சா!

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 12ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது மிஷன் சாப்டர் 1 படம். அருண் விஜய் இந்தப் படத்தில் ஜெயிலராகவும் சிறப்பான தந்தையாகவும் நல்ல பர்பார்மென்சை கொடுத்திருந்த நிலையில் படம் கடந்த 4 நாட்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது. இந்தப் படத்தின் பிரமோஷன்களையும் முன்னதாக அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சிறப்பாக செய்திருந்த நிலையில், தற்போது படம் ரிலீசான பின்பும் அதை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் படத்தினை இயக்குநர் விஜய் டைரக்ட் செய்துள்ள நிலையில் சென்னை, லண்டன் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்ஷன், நிமிஷா சஜயன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், படம் ஆக்ஷன், சென்டிமெண்ட் என ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் படம் மிகப்பெரிய பிக்கப்புடன் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இரண்டாவது வாரத்தில் படத்தின் திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக நடிகர் அருண் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.

Actor Arun Vijay visits Pondicherry theatres and enjoys the Mission chapter 1 movie show with fans

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விஜய் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் மிஷன் சாப்டர் 1. பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்தப் படத்தை லைகா தயாரித்துள்ளது. படத்தில் அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு மிகப்பெரிய பலமாக ஜிவி பிரகாஷின் இசை அமைந்துள்ளது. படத்தில் தன்னுடைய குழந்தையின் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் ஜெயிலர் அருண் விஜய், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிறை செல்ல, அங்கு தீவிரவாதிகளின் சதியை அவர் முறியடிப்பதாக கதைக்களம் காணப்படுகிறது.

மிஷன் சாப்டர் 1 படம்: சிறையிலிருந்து அவர் எப்படி வெளியில் வருகிறார், குழந்தையின் ஆபரேஷன் என்னவானது என்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்படுகிறது. நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குநர் விஜய், இந்தப் படத்தின்மூலம் மீண்டும் ஆக்ஷன் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். சிறப்பான கதைக்களத்துடன் அவர் படத்தை அணுகியுள்ளார். அவருக்கு அருண் விஜய்யும் சிறப்பாக ஒத்துழைத்துள்ள நிலையில், படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து முதல் நாளை காட்டிலும் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. படத்தில் அபி ஹாசன், பரத் பொபன்னா உள்ளிட்டவர்களின் நடிப்பும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

ரசிகர்கள் வரவேற்பு: படத்தின் கதைக்களம் லண்டன் சிறையை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர் சந்துப் கே விஜய் மற்றும் எடிட்டர் ஆண்டனி ஆகியோரின் வேலைகளும் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே அருண்விஜய் மற்றும் இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பாண்டிச்சேரியில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளனர். இதன் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

தியேட்டரில் படம்பார்த்த அருண் விஜய்: அருண் விஜய் மற்றும் இயக்குநர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது ரசிகர்களிடையே பேசிய அருண்விஜய், பண்டிகை நாளில் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான படத்தை கொடுத்த இயக்குநர் விஜய்க்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பு காரணமாக படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X