இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன்... நடிகர் அருண் விஜய் சொன்ன தகவல்!

சென்னை : தமிழ் திரையில் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், யானை திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

இந்த பட Shootingல தான் எனக்கு Injury ஆச்சு! - ArunVijay | Yaanai Trailer Launch | #Kollywood

டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்..சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

யானை திரைப்படம் ஜுன் 17 அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.

யானை

யானை

நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'யானை'. இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நட்சத்திர பட்டாளங்கள்

நட்சத்திர பட்டாளங்கள்

இந்த திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த திரைப்படம் ரிலீசுக்கு நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு, பலமுறை தள்ளிப்போனது. இறுதியாக யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன்

இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன்

இதையடுத்து, யானை திரைப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்பு வெளியானது.இந்த டிரைலரில் பெரும்பாலான காட்சிகளில், அருண் விஜய் புகைப்பிடித்துக்கொண்டே இருந்தார். இதுகுறித்து அவரிடத்தில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த அருண் விஜய், இந்த கதாபாத்திரத்திற்கு இந்த காட்சிகள் தேவைப்பட்டதால் சில காட்சிகளில் புகை பிடித்தபடி நடித்திருக்கிறேன். ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

உணர்வுப்பூர்வமான கதை

உணர்வுப்பூர்வமான கதை

மேலும், யானை படப்பிடிப்பின் போது, எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. அப்போதும் காயத்தை பொருட்படுத்தாமல், படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இந்த யானை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய உணர்வுப்பூர்வமான ஒரு கதை, யானை படம் அனைத்து வயதினருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்றார் அருண் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X