Mission chapter 1: தீவிரவாதிகள் சதியை முறியடிக்கும் ஜெயிலர்.. மிஷன் சாப்டர் 1 டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மிஷன் சாப்டர் 1 படம். லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சென்னை, லண்டன் ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துள்ள நிலையில் படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. படத்தை இயக்குநர் விஜய் டைரக்ட் செய்துள்ளார். இன்றைய தினம் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். அந்தப் படத்திற்கு முன்னதாக தற்போது மிஷன் சாப்டர் 1 படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்தில் தீவிரவாதிகளின் சதியை லண்டனில் முறியடிக்கும் ஜெயிலரை முன்னிருத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்திற்கான சிறப்பான பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் அருண் விஜய்யின் முதல் படமாக மிஷன் சாப்டர் 1 அமைந்துள்ளது. இதுகுறித்து முன்னதாக நடைபெற்ற பத்திரியாளர் சந்திப்பில் அருண் விஜய் கூறியிருந்தார்.

நடிகர் அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் தன்னை நிரூபிக்கும் வகையிலான கேரக்டர்களையும் கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது யானை படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆக்ஷன் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. பொங்கலையொட்டி வெளியாகியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
தினந்தோறும் 1500 பேர்: இந்தப் படத்தின் ரிலீசையொட்டி முன்னதாக அருண் விஜய் சிறப்பான பல பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தார். படத்திற்கான பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் நடத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அருண் விஜய், தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சமும் ரிலாக்ஸ் செய்ய விடாமல் இயக்குநர் விஜய் சரியான திட்டமிடலுடன் படத்தின் சூட்டிங்கை நடத்தி முடித்ததாகவும் ஒவ்வொரு நாளும் சூட்டிங் ஸ்பாட்டில் 1500 பேராவது இருப்பார்கள் என்றும் அவர்கள் அனைவரையும் விஜய் சியப்பாக வேலை வாங்குவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதிக பொருட்செலவு: தான் இதுவரை நடித்த படத்திலேயே அதிக பொருட் செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அருண் விஜய், இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை தனக்க கொடுத்த விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார். ஆக்ஷன், எமோஷன் என இந்தப் படத்தில் அனைத்துமே சரியாக வந்திருப்பதாகவும் கூறியிருந்தார். படம் சிறப்பான திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் அருண் விஜய் குறிப்பிட்டிருந்தார். நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இந்தப் படத்திற்காக உருவாக்கியதாகவும் சில காரணங்களால் அது சேதமானபோது செலவு குறித்து கவலைப்படாமல் மீண்டும் லைகா நிறுவனம் செட் அமைத்து கொடுத்ததாகவும் அருண் விஜய் பாராட்டியிருந்தார்.
டிவிட்டர் விமர்சனம்: இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து டிவிட்டரில் ரசிகர்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தீவிரவாதிகளின் சதியை லண்டனில் முறியடிக்கிற தமிழ்நாட்டு ஜெயிலரின் கதை என்று ட்விட்டரில் ஒருவர் விமர்சித்துள்ளார். மேலும் எடுத்துக் கொண்ட விஷயங்களை மட்டும் கச்சிதமாக சொல்லி அங்கே இங்கே என்று சுத்தலில் விடாத சத்தமான கமர்ஷியல் சினிமாவுக்கே ஆன அக்மார்க் திரைப்படம் என்றும் அலுப்பு சலிப்பின்றி ஏமாற்றமளிக்காத படம்தான் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே தந்தை மற்றும் மகளின் ரிலேஷன்ஷிப்பை சிறப்பாக படம் வெளிப்படுத்தியுள்ளதாக மற்றொரு ரசிகர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
சிறப்பான இடைவேளை ட்விஸ்ட்: படத்தின் அருண் விஜய்யின் இருப்பு சிறப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் இன்டர்வல் மற்றும் இரண்டாவது பாதி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக்கியுள்ளதாகவும் படத்தின் சிறப்பான க்ளைமாக்ஸ் படத்திற்கு வலு சேர்த்துள்ளதாகவும் அந்த ரசிகர் மேலும் பாராட்டியுள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய்யின் டெடிகேஷன் மற்றும் நடிப்பு மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதேபோல படத்தில் நிமிஷா சஜயன் மற்றும் எமி ஜாக்சனும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திரில்லிங் அனுபவம்: இதனிடையே மிஷன் சாப்டர் 1 படத்தின் முதல் பாதி ஆக்ஷன் மற்றும் திரில்லிங் அனுபவத்தை சிறப்பாக கொடுத்துள்ளதாகவும் அருண் விஜய் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்க்ததில் தெரிவித்துள்ளார். படத்தில் பஸ் ஆக்ஷன் மற்றும் சிறைச்சாலை காட்சிகள் டாப் நாட்ச் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைவேளையின்போது படத்தில் ஏற்படும் ட்விஸ்ட் இரண்டாவது பாதியை மிகச்சிறப்பாக கொண்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











