அருண்விஜய் கையில் காயம்… படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்து!

சென்னை : நடிகர் அருண்விஜய் படப்பிடிப்பின் போது காயம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து அருண்விஜய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

மேலும் 5 நாட்களுக்கு எடைதூக்கும் பயிற்சியை மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அருண்விஜய் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் அருண்குமார். பின்னாளில் தனது பெயரை அருண்விஜய் என்று மாற்றிவைத்துக்கொண்டார். தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடிப்பில், வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

மிரட்டும் வில்லனாக

மிரட்டும் வில்லனாக

தொடர்ந்து அருண் விஜய்யின் திரைப்படங்கள் தோல்வி அடைந்து வந்து நிலையில் அவர் அஜித்துடன் இணைந்து நடித்த "என்னை அறிந்தால்" படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டும் வில்லனாக நடித்து ரணகளப்படுத்தி இருப்பார். அஜித்துக்கு முன்னால் அசால்ட்டாக நடித்து அசத்திய அருண்விஜய்க்கு இப்படம் ஒரு கம் பேக் படமாக அமைந்தது. அப்படத்தில் இடம் பெற்ற அத்தாரு அத்தாரு பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.

கவனமாக கதைத்தேர்வு

கவனமாக கதைத்தேர்வு

அருண் விஜய் தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். குற்றம் 23ல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும், மணிரத்னம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செம்ம ஸ்டைலாக வெளியான செக்கசிவந்த வானம் படத்தில் ஒரு ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து துவம்சம் செய்து இருப்பார் அருண்விஜய். தடம் படத்தில், எழில், கவின் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, ஆக்ஷன் , ரொமான்ஸ் என அனைத்திலும் புகுந்து விளையாடி இருப்பார்.

அருண் விஜய்33

அருண் விஜய்33

நெருங்கிய உறவினரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக AV33 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதில், மீசையை முறுக்கிவிட்டு மாஸாக இருந்தார்.

பிரியா பவானி சங்கர் ஜோடி

பிரியா பவானி சங்கர் ஜோடி

அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும், பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

அருண்விஜய் காயம்

அருண்விஜய் காயம்

இந்நிலையில், நடிகர் அருண்விஜய் படப்பிடிப்பின் போது கையில் காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அருண்விஜய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும் 5 நாட்களுக்கு எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ளப்போவதில்லை என்றும் அருண்விஜய் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

அருண் விஜய் அக்னி சிறகுகள், சினம், பாக்சர் மற்றும் பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X