முரட்டு மீசை... செம டெர்ரர் லுக்… அருண் விஜயின் வேறலெவன் போட்டோ!
சென்னை : நடிகர் அருண்விஜய் முரட்டு மீசையுடன் டெர்ரராக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இந்த செம மாஸாக இருக்கும் அருண் விஜயின் இந்த கெட்டப் ஒரு வேளை ஹரி படத்திற்கான கெட்டப்பா இருக்குமோ என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.

மாஸ் ஹீரோ
திரைத்துறையில் 400 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய் திரைத்துறையில் மிக முக்கியமான இளம் நடிகராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.

ரோலில்
இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

பல படங்கள்
மாஃபியா படத்தைத் தொடர்ந்து அருண்விஜய் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு நிறுத்தம்
பார்டர் படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் தயாராகி வரும் AV 33 படத்தில் நடித்து வருகிறார் அருண்விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளார்.யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முரட்டு மீசை
தற்போது இவர் முரட்டு மீசையுடன் செம டெர்ரராக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் அருண். அந்த புகைப்படம் வேறலெவலில் வைரலாகி வருகிறது. இது ஹரி படத்திற்கான கெட்டப்பா என்பது இன்னும் உறுதியாகவில்லை இருந்தாலும் செம மாஸாக இருக்கும் அருண் விஜயின் இந்த புகைபடங்கள் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











