“கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி.. அருண்விஜயின் கருத்து !
சென்னை : நடிகர் அருண்விஜய் தற்போது ட்விட்டரின் மூலம் மிக முக்கியமான கருத்து ஒன்றை ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார்.
Recommended Video
முறைமாப்பிள்ளை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் தான் அருண் விஜய். இந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையவில்லை என்றாலும், அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. இவர் பிரியம் படத்தில் மந்திராவுடன் ஜோடி சேர்த்து நடித்தார்.
இந்த படத்தின் பாடல்கள் உடையாத வெண்ணிலா, தில்ருபா தில்ருபா போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. இதையடுத்து, கங்காகவுரி,காத்திருந்த காதல், துள்ளித்திருந்த காலம் போன்ற படங்களில் நடித்தாலும் முன்னணி ஹீரோவாக இவரால் வலம் வர முடியவில்லை.

சறுக்கல்
அருண்விஜய் பல சறுக்கல்களை சந்தித்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் நடிக்கும் படங்கள் மீதும் அவரின் நடிப்பின் மீதும் பல கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதை தாண்டி அருண்விஜய் நாயகனாக வலம் வந்த காலகட்டத்திலே அப்போது வளர்ந்து வந்த நடிகர்கள் பலர் அவரை கேலி பேசியிருந்ததாக பல பத்திரிகைகளின் வாயிலாக கூறபட்டிருக்கிறது.

மாஸ் ஹீரோ
கிட்டத்தட்டட பத்து வருட போராட்டத்திற்கு பிறகு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலமே இவரால் மாஸ் ஹீரோ என்ற பெயரை பெற முடிந்தது. அவர் நடித்த விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரம் இவருக்கு திரைத்துறையில் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத்தந்தது. இதனையடுத்து குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த அருண் விஜய், சமீபத்தில் மாஃபியா என்ற திரைப்படத்தில் மிகவும் ஸ்டைல் நடிகராக மாறியுள்ளார்.

உழைத்திடு, உயர்த்திடு
தற்போது அருண்விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி.." தன்னம்பிக்கையோடு உழைத்திடு! உயர்ந்திடு! என்று கூறியியுள்ளார். பல அவமானங்கள் பல போராட்டங்கள் என்று தன் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் உடல் மீது செலுத்தி வரும் அருண்விஜய். ஜிம்மில் உழைத்து களைத்து போயுள்ள புகைப்படத்துடன் இந்த வரிகளை பதிவிட்டுள்ளார்.

கைவசப்படங்கள்
கொரன்டைன் நேரத்தில் தினந்தோறும், தன்னால் முடிந்த ஊக்கத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரின் பல ட்வீட்கள் ஊக்கத்துடனும் துடிப்புடனும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அருண்விஜய்க்கு இந்த ஆண்டு நிறைய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள், வா டீல் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கொரன்டைன் காலம் முடிந்ததும் வரிசையாக ஒவ்வொரு படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல படங்களின் மூலம் தனது திறமையை வெளிகாட்டி அருண்விஜய் சினிமாவில் தன் பங்கை உணர்ந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











