அந்தரத்தில் தொங்கியபடி உடற்பயிற்சி.. கண் இமைக்கும் நேரத்தில் கீழேவிழுந்த அருண்விஜய்.. பகீர் வீடியோ!

சென்னை : நடிகர் அருண்விஜய் தனது ட்விட்டரில் உடற்பயிற்சியின் போது கீழேவிழுந்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

தலைகீழாக விழுந்த Victor Arun Vijay terrific workout | Mafia, Yennai Arindhal, Sinam

சினிமாவில் தங்களின் ஆரம்ப காலங்களில் மக்களால் எற்றுகொள்ளபடாமல் பின் கடின உழைப்பால் பலரின் மனதிலும் இடம் பிடித்த நடிகர்கள் உள்ளனர்.

Actor Arunvijay shared a throwback video

அந்த வகையில் தளபதி விஜய், சூர்யா போன்றோர்கள் தங்களின் தந்தை மூலம் சினிமாவில் வந்தாலும் அவர்களின் திரையுலக பயணத்தின் தொடக்கத்தில் அவர்கள் பல அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்தவர்கள்.

ஆனால் தங்களின் கடின உழைப்பால் தற்போது பலராலும் ரசிக்கப்படும் நிலைக்கு வளர்ந்துள்ளனர். அதே போல்தான் நடிகர் அருண் விஜய் அவர்களும் தன் அப்பா விஜயகுமார் மூலம் தமிழ் சினிமாவில் வந்தார். முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய் தற்போது முன்னணி நடிகராக மாறி உள்ளார்.

Actor Arunvijay shared a throwback video

பாண்டவர் பூமி, தவம் போன்ற படங்களில் மக்களின் மனதில் தெரிந்தவராக இடம் பிடித்தாலும் பெரிதும் பேசப்படவில்லை அதன் பின் மாஞ்சா வேலு, மலை மலை போன்ற கமெர்சியல் படங்களில் நடித்து ஓரளவு பிரபலமானார் பின்னர் 2012ஆம் ஆண்டு வெளியான தடையற தாக்க திரைப்படம் இவரின் வாழ்வில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லாம்.

Actor Arunvijay shared a throwback video

அதன் பின் 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் இவரின் பல ஆண்டு கால உழைப்பிற்கு ஆறுதல் தந்தது. தொடர்ந்து குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், மாஃபியா போன்ற வெற்றி படங்களை கொடுத்து பல ஆண்டுகள் கழித்து தான் விரும்பிய இடத்தை அடைந்தார். இவரின் வெற்றிக்கு மற்றொரு பெரிய காரணம் இவரின் உடல் கட்டமைப்புதான் என்று பலரும் சொல்கின்றனர்.

Actor Arunvijay shared a throwback video

லாக்டவுன் என்பதால் பலரும் தங்களின் பழைய போடோக்கள், வீடியோக்கள் என வெளியிட்டு வருகின்றனர். அதே போல் அருண் விஜய் அவர்களும் தன்னுடைய பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Arunvijay shared a throwback video

அதில்,அருண்விஜய் ஒரு கம்பியை பிடித்துக்கொண்டு தலைகீழாக அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறார். அப்போது, ஒரு பந்தை கையில் எடுத்துக்கொண்டு தன் முட்டிக்கு மேல் போடா முயற்சிக்கிறார். அப்போது, திடீரென அந்த கம்பி சுழன்று 'தொப்பென' கீழே விழுந்துவிட்டார் தற்போது இந்த வீடியோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் மேல் ஒர்க் அவுட் செய்யும் போது தயவு செய்து உங்கள் மெஷின்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள், நல்ல வேலையாக என் தலையில் அடிபடவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பல ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X