மகாமுனி படத்தை ஏன் டி வி யில் பார்க்க வேண்டும் ... இரட்டை வேடத்தில் நடித்த ஆர்யா சொல்லும் பதில்

சென்னை: உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் 'மகாமுனி' திரைப்படம் ஒளிபரப்பு

பல ரத பட்ட கருத்துக்களை பெற்ற இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி மதியம் 12:30 மணி மற்றும் மீண்டும் மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ள இந்த அதிரடி திரைப்படம் வரும் ஞாயிறன்று சண்டே சினி ஜம்போவில் நண்பகல் 12.30 மாலை 4.00 மணிக்கும் ரிப்பீட் மோடில் ஒளிபரப்பாக உள்ளது.

மகாதேவன் மற்றும் முனிராஜ்

மகாதேவன் மற்றும் முனிராஜ்

சாந்தகுமார் இயக்கி உள்ள இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் கதாநாயகனாக ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவருடன் மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன், காளி வெங்கட், ரோகினி, ஜெயபிரகாஷ், இளவரசு மற்றும் அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை நீண்ட காலமாக பிரிந்திருக்கும் இரண்டு சகோதரர்கள் மகாதேவன் மற்றும் முனிராஜ் (இரு வேடங்களிலும் ஆர்யா நடித்துள்ளார்) ஆகியோரை சுற்றி வருகிறது.

விவேகானந்தரின் போதனை

விவேகானந்தரின் போதனை

மகாதேவன் குற்றம் செய்வதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் அவன் அதிலிலிருந்து வெளியேறி தன் மீது பாசம் வைத்துள்ள தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்க கடினமாக உழைக்கிறான். அதேசமயம் முனிராஜ் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளான். அதை அவன் சிறு குழந்தைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறான். முனிராஜின் உத்வேகத்துடன் அமைதி மற்றும் அகிம்சைக்கான மகாதேவனின் தேடலைச் சுற்றியே மீதமுள்ள கதைக்களம் அமைந்துள்ளது.

பார்க்க வேண்டிய ஆர்யா

பார்க்க வேண்டிய ஆர்யா

இது குறித்து நடிகர் ஆர்யா கூறுகையில், கலர்ஸ் தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சியில் இப்படியொரு சுவாரசியமான கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பது உண்மையிலேயே சிறப்பானது. பார்வையாளர்கள் ஒரு சிறப்பான வார இறுதியை எதிர்பார்க்கலாம், மேலும் இது பார்க்க வேண்டிய பயனுள்ள படம் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்." என்று தெரிவித்தார்.

சாந்தகுமார்

சாந்தகுமார்

இது குறித்து இயக்குனர் சாந்தகுமார் கூறுகையில், எனது இரண்டாவது படமான இந்த திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நல்ல கதை அம்சம் கொண்டுள்ள இந்த படத்தில் அற்புதமான நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். பார்வையாளர்களுக்கு இந்த வார இறுதி பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இரண்டு சகோதரர்களின் மனதைக் கவரும் பயணத்தை மதியம் மற்றும் மாலை இரண்டு முறை டெலிகாஸ்ட் ஆவதால் ஏதாவது ஒரு முறையாவது பார்த்து ரசியுங்கள்.

Recommended Video

Annaatthe படத்தில் நடித்த அனுபவம் | Actor Vishwanth Exclusive | Filmibeat Tamil
டி ஆர் பி ரேட்டிங்

டி ஆர் பி ரேட்டிங்

ஆர்யா நடித்த படங்களுக்கு பெரும்பாலும் டிவியில் ஒளிபரப்பாகும் பொழுது மிகுந்த வரவேற்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் டி ஆர் பி ரேட்டிங் மிகவும் அதிகமாக வருவதற்கு ஆர்யாவின் பல படங்கள் உதாரணமாக இருந்திருக்கிறது .சமீபத்தில் "டெடி" படம் தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது . அதுபோலவே ஆர்யாவின் பல படங்கள் எந்த டி வி ஆக இருந்தாலும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்க்கின்றனர் என்பது பலரும் சொல்லும் ஒரு கருத்து .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X