மீண்டும் டெடி இயக்குநரோடு இணையும் அரண்மனை 3 நாயகன்... வேற லெவல் ப்ளான்!
சென்னை : பா ரஞ்சித் இயக்கத்தில் சார்ப்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு அரண்மனை 3 படத்தில் நடித்துள்ளார் ஆர்யா.
அடுத்தடுத்து இரு வெற்றிப் படங்கள் அவர் நடிப்பில் வெளிவந்த நிலையில், அடுத்ததாக தீபாவளி ரிலீசாக எனிமி படம் ரிலீசாக உள்ளது.
இதையடுத்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு படத்தில் நடித்து தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார் ஆர்யா.

நடிகர் ஆர்யா
நடிகர் ஆர்யா சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சக்தி சௌந்தர் ராஜனின் இயக்கத்தில் அவர் நடித்திருந்த டெடி படம் அவரது நடிப்பிற்கு சரியான தீனி போட்டது. அந்தப் படத்தின் வித்தியாசமான முயற்சி மற்றும் திரைக்கதை அனைவரையும் கவர்ந்தது.

சார்பட்டா பரம்பரை படம்
இதையடுத்து பா ரஞ்சித் இயக்கம் ப்ளஸ் தயாரிப்பில் ஆர்யா நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. கடந்த ஜூலை மாதத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

குத்துச்சண்டை பரம்பரை
70களில் சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை பரம்பரைகளிடையே ஏற்பட்ட போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரையும் கவர்ந்தது. படத்திற்காக ஆர்யாவின் மெனக்கெடல் மிகவும் சிறப்பாக இருந்தது.

அரண்மனை 3 படம்
இதையடுத்து ஆயுதபூஜையையொட்டி வெளியான அரண்மனை 3 படத்திலும் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும், வசூலை குவித்து வருகிறது. இதையடுத்து தீபாவளிக்கு ஆர்யா, விஷால் நடிப்பில் எனிமி படம் ரிலீசாக உள்ளது.
Recommended Video

எனிமி படம்
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷாலுக்கு எனிமியாகியுள்ளார் ஆர்யா. இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படத்துடன் இந்தப் படம் மோதவுள்ளது.

டெடி இயக்குநருடன் மீண்டும் ஆர்யா
இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் டெடி இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் மீண்டும் இணையவுள்ளார் ஆர்யா. இந்தப் படத்திலும் மீண்டும் சயின்ஸ் பிக்ஷனையே கையாள உள்ளார் இயக்குநர். இந்தப் படத்தை ஆர்யாவே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்வுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











