தீபாவளிக்கு ரிலீசாகும் எனிமி படம்... ரசிகர்களுக்கு நடிகர் ஆர்யா ஸ்பெஷல் மெசேஜ்!
சென்னை : நடிகர்கள் விஷால், ஆர்யா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் எனிமி.
இந்தப் படத்தில் விஷாலுக்கு எனிமியாக நடித்துள்ளார் ஆர்யா. படத்தில் இருவருக்கும் சமமான கதாபாத்திரங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்னும் 4 நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில் படம் குறித்து நடிகர் ஆர்யா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை தெரிவித்துள்ளார்.

எனிமி படம்
நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து மிரட்டும் படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷாலுக்கு எனிமியாகியுள்ளார் ஆர்யா. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

ஆர்யாவை புகழ்ந்த விஷால்
இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், ஆர்யாவை வெகுவாக புகழ்ந்துள்ளார். திடீரென ஆர்யா சிறப்பாக நடித்து வருவதாகவும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வினோத்குமார் தயாரிப்பு
படத்தில் விஷால், ஆர்யாவுடன் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா மற்றும் கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கான இசையை தமனும் பின்னணி இசையை சாம் சிஎஸ்ஸும் அமைத்துள்ளனர்.

ஆர்யா ஸ்பெஷல் மெசேஜ்
படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் 4 நாட்களில் படம் ரிலீசாக உள்ளது குறித்தும் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது படம் குறித்து நடிகர் ஆர்யாவும் ஸ்பெஷல் மெசேஜ் ஒன்றை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
திரையரங்குகளில் ரசிகர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மீண்டும் ரசிகர்கள் வந்து படத்தை பார்ப்பது மிகவும் வரவேற்புக்குரிய விஷயம் என்று தெரிவித்துள்ள அவர், தான் நடித்துள்ள எனிமி படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீபாவளி வாழ்த்து
மேலும் அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடவும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்துள்ள படம் எனிமி. இந்தப் படம் அண்ணாத்த படத்துடன் தீபாவளி பந்தயத்தில் உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











