விஷ்ணு விஷால் டார்லிங்குக்கு வாழ்த்துக்கள்... ஆர்யா ஸ்பெஷல் ட்வீட்!

சென்னை : நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் இரண்டாவது லுக் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் டீமிற்கு நடிகர் ஆர்யா தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா, விஷால் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்கள் கோலிவுட்டில் சிறந்த நண்பர்களாக விளங்குகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் புதிய பட அறிவிப்புகள் உள்ளிட்டவற்றிற்கு வாழ்த்துக்களை பகிர்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மோகன்தாஸ் படம்

மோகன்தாஸ் படம்

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தின் இரண்டாவது லுக் நேற்றைய தினம் வெளியானது. படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஹாரீக் ஹாசன், லல்லு, பிரகாஷ ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.

இரண்டாவது லுக் வெளியீடு

இரண்டாவது லுக் வெளியீடு

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் அழுத்தமான சிரிப்புடன் காணப்படுகிறார். அவரது கையில் ரத்தக்கறையுடன் கூடிய ஆயுதம் காணப்படுகிறது.

ரசிகர்களை கவர்ந்த லுக்

ரசிகர்களை கவர்ந்த லுக்

மேலும் இந்த போஸ்டரில் மூன்று குரங்குகள் பொம்மைகளாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. நான்காவதாக ஒரு குரங்கு வீழ்த்தப்பட்டுள்ளதை போல அமைந்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படத்திற்கான வரவேற்பை கூட்டியுள்ளது.

ஆர்யா வாழ்த்து

ஆர்யா வாழ்த்து

இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினருக்கு அவர் வெற்றிபெற வாழ்த்துக்களை கூறியுள்ளார். விஷ்ணு விஷாலை அவர் டார்லிங் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான நட்பு

சிறப்பான நட்பு

கோலிவுட்டில் ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்கள் ஆரோக்கியமான நட்பை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது நட்புவட்டம் மிகவும் சிறப்பானதாக உள்ளது. தனிப்பட்ட முறையிலும் தங்களது கேரியரிலும் ஒருவருக்கொருவர் சிறப்பான உதவிகளை செய்து வருவது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X