Arya: “ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா“.. ஜிம்மில் ஆட்டம் போடும் ஆர்யா.. கண்டுக்காத மனைவி!
சென்னை: திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் ஆர்யா. இவர் நடிப்பில் தற்போது 'மிஸ்டர் எக்ஸ்' மற்றும் 'வேட்டுவம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தனது 40வது படத்தில் நடித்து வரும் இவர் ஜிம்மில் இரண்டு நடிகைகளுடன் ஒர்க் அவுட் செய்யும் போட்டோ வெளியாகி உள்ளது.
அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஆர்யா. அந்த படத்தை அடுத்து, ஒரு கல்லூரியின் கதை, உள்ளம் கேட்குமே போன்ற படங்களின் மூலம் உருகி உருகி காதலிக்கும் கல்லூரி மாணவனாக வலம் வந்தார் ஆர்யா. சாக்லெட் பாயாக வலம் வந்த ஆர்யாவிற்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த படம் தான் 'நான் கடவுள்', பாலா இயக்கத்தில் அகோரியாக நடித்த ஆர்யா தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார்.

நடிகை ஆர்யா: இதையடுத்து அடுத்தடுத்த வெற்றிப்படத்தில் நடித்து வந்த ஆர்யா, பா ரஞ்சித்தின் இயக்கத்தில், சார்பட்டா பரம்பரை' படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்போது ஆர்யாவின் நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்' மற்றும் 'வேட்டுவம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதோடு மட்டுமில்லாமல், மலையாள இயக்குநர் நிகில் முரளி இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்யாவின் மனைவி சயீஷா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் ஆர்யாவின் பிறந்த நாளில் போடப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக கடந்து வருகின்றன.
ஆர்யா போட்டோஸ்: காதல் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவி சைதன்யா தனது இன்ஸ்டாகிராமில் ஆர்யாவுடன் ஜிம்மில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில், ஆர்யா நடுவில் இருக்க, ஒரு பக்கம் நடிகை வைஷ்ணவி சைதன்யா, மறுபக்கம் நடிகை நிகிலா விமலும் உள்ளனர். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், ஜிம்மில் இப்படி ஆட்டம் போடுறீங்களா என்றும், மனைவி கண்டுக்கா மாட்டாங்களா என கேட்டு வருகின்றனர். தற்போது இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications