Ashok selvan: அஜித் சாருக்கு வில்லனா நடிக்கணும்.. அசோக் செல்வனின் ஆசையை பாருங்க!
சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் அவரது துணிவு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்தார். இவர்களது கூட்டணி இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருந்தது. முன்னதாக நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களிலும் இவர்கள் இணைந்திருந்த நிலையில் ஹாட்ரிக் வெற்றியை இந்தக் கூட்டணி கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனியுடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
தன்னுடைய படத்தில் வரும் ஒரு வசனத்தை போல ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய வாழ்க்கையை தானே செதுக்கி வருகிறார் அஜித். தனக்கென்று ஒரு கொள்கை, தனக்கென்று ஒரு விருப்பம் இவற்றை விட்டுக் கொடுக்காமல் நடிப்பையும் தொடர்ந்து வருகிறார். அவரை ரசிகர்கள் தல என்று கொண்டாடி வந்த நிலையில், அந்தப் பட்டம் தனக்கு வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்துவந்த நிலையில், அங்கு பெய்துவரும் பனிமழை காரணமாக படத்தின் சூட்டிங் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் சினிமா கேரியர் மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் அவர் தானே முயற்சித்து தன்னுடைய சினிமா கேரியரை சிறப்பாக வடிவமைத்துள்ளார். தல என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஜித், அந்தப் பட்டத்துடன் தன்னை கூப்பிட வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களை கேட்டுக் கொண்டார். கடந்த ஆண்டில் இவரது துணிவு படம் வெளியான நிலையில் கடந்த தீபாவளியையொட்டியே இவரது அடுத்தப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் சூட்டிங்கே தீபாவளியையொட்டிதான் துவங்கப்பட்டது.
விடாமுயற்சி படம்: கடந்த இரு மாதங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடந்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கவில்லை. அங்கு பனிமழை பெய்துவருவதால் சூட்டிங்கை நடத்த முடியாத நிலையில் படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சூட்டிங் நடக்கும் இடத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார். அஜித் தன்னுடைய சினிமா கேரியரை மிகவும் சிரமத்திற்கிடையில் சிறப்பாக மேற்கொண்டு தற்போதைய நிலையை எட்டியுள்ளார். அவருக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அஜித் வில்லனாக ஆசைப்பட்ட அசோக் செல்வன்: இந்நிலையில் நடிகர் அசோக்செல்வன் தனது பழைய பேட்டியொன்றில் தான் அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் என்றும் அதனால் அவருடன் வில்லனாக நடிப்பதே தன்னுடைய ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்தவிதமான பேக்கப்பும் இல்லாமல் தன்னை நிரூபித்த அஜித்தின் வாழ்க்கை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அசோக்செல்வன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். அஜித்தின் இந்தப் பயணம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பில்லா 2வில் நடித்துள்ள அசோக் செல்வன்: முன்னதாக அஜித்தின் பில்லா 2 படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் அசோக் செல்வன். இந்நிலையில் அஜித்திற்கு வில்லனாக வேண்டும் என்ற அவரது விருப்பம் குறித்த இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ப்ளூ ஸ்டார் முதல் ஏராளமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அசோக் செல்வன். வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்துக் கொண்டு அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் சரத்குமாருடன் இணைந்து அசோக்செல்வன் நடித்திருந்த போர் தொழில் படம் சிறப்பான வெற்றியை பெற்றது.


Click it and Unblock the Notifications











