எனக்கு அரேஞ்ச் மேரேஜ் செட்டாகாது..திருமணம் குறித்து அசோக் செல்வனின் சுவாரசிய பதில்!

சென்னை : நடிகர் அசோக் செல்வன் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அசோக் செல்வன். பில்லா 2 படத்தில் இளம் வயது அஜித்தாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

சூதுகவ்வும், பீட்சா-2, தெகிடி என வித்தியாசமான கதையம்சம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அசோக் செல்வன்

அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், மன்மத லீலை என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில், அசோக் செல்வனுக்கு ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் என 3 கதாநாயகிகளுடன் நடித்திருந்தார் அசோக் செல்வன். படத்தில் கசமுசா, லிப் லாங் காட்சி என மனுஷன் மிரட்டி இருந்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது

என் நீண்ட நாள் ஆசை

என் நீண்ட நாள் ஆசை

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அசோக் செல்வன், படங்களின் மூலமாகத்தான் நான் ரசிகர்களை சந்தித்து இருக்கிறேன். உங்களை தனியாக சந்தித்து பேச வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை இது இப்போது நிறைவேறி உள்ளது. நான் சினிமா குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, இதனால் சினிமாவுக்கு வரும் போது பெரிய போராட்டத்தை நான் சந்தித்தேன் அந்த நேரத்தில் ரசிகர்கள் பெரிய ஆதரவை கொடுத்தார்கள்.

அரேஞ்ச் மேரேஜ் செட்டாகாது

அரேஞ்ச் மேரேஜ் செட்டாகாது

ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். வீட்டில் இப்போதைக்கு கல்யாண பேச்சு இல்லை, ஆனால் எனக்கு அரேஞ்ச் மேரேஜ் செட்டாகாது என்று தான் தோன்றுகிறது. அதே போல பல ஹீரோயின்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், இதுவரை எந்த நடிகையும் நான் காதலிக்கவில்லை என்றார்.

கிராமத்து கதையில்

கிராமத்து கதையில்

கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதை அம்சத்தை கொண்ட கதையில் என்னை பார்க்கலாம். அடுத்ததாக சரத்குமாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X